»   »  சபாஷ் நாயுடு: கமலின் புதிய 'கெட்டப்' வெளியானது!

சபாஷ் நாயுடு: கமலின் புதிய 'கெட்டப்' வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகர் மாதவன் வெளியிட, இணையத்தில் அது வைரலாகி வருகிறது.

மகள் ஸ்ருதியுடன் சேர்ந்து அப்பா கமல்ஹாசன் முதன்முறையாக நடிக்கும் படம் 'சபாஷ் நாயுடு'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.


Sabash Naidu: Kamal's New Getup Goes Viral

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் தொடங்கியது. படத்தின் இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கமலே இயக்குநராக மாறி இப்படத்தை எடுத்து வருகிறார்.


இந்நிலையில் இப்படத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக கமல் தெரிவித்திருக்கிறார்.இதில் கமலுக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், முக்கிய வேடத்தில் பிரம்மானந்தமும் நடிக்கின்றனர்.


ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் சம்பந்தப்பட்ட காட்சிகளை கமல் தற்போது எடுத்து வருகிறார். 2002 ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த 'பஞ்சதந்திரம்' படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.


Sabash Naidu: Kamal's New Getup Goes Viral

14 வருடங்களுக்குப் பின் கமல்-ரம்யா கிருஷ்ணன் ஜோடி மீண்டும் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இந்நிலையில் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகர் மாதவன் வெளியிட்டிருக்கிறார்.


இதுவரை 'சபாஷ் நாயுடு' படத்தின் எந்த ஒரு புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டதில்லை என்பதால் ரசிகர்கள் இதனை அதிகளவில் பகிர, இணையத்தில் கமலின் புதிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

English summary
Sabash Naidu: Kamal Haasan's New Getup now Revealed.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil