»   »  சேஸிங் காட்சிகளுடன் துவங்குகிறது கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு'

சேஸிங் காட்சிகளுடன் துவங்குகிறது கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு கமல்ஹாசன், பிரம்மானந்தம் பங்கேற்கும் சேஸிங் காட்சிகளுடன் தொடங்குகிறது.

மலையாள இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் கமல், ஸ்ருதி, பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் என ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கப் போகும் படம் 'சபாஷ் நாயுடு'.


கடந்த மாதம் இப்படத்தின் பூஜை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் தொடங்கவுள்ளனர்.


Sabash Naidu Shooting Begins

கமல், பிரம்மானந்தம் பங்கேற்கும் சேஸிங் காட்சியை படத்தின் முதல் காட்சியாக எடுக்கவிருக்கிறார்கள். இருவருமே டூப் போடாமல் நடிப்பதால் அதற்காக படக்குழு சில நாட்கள் ஒத்திகை பார்த்திருக்கிறதாம்.


இதில் கமல் உளவுத்துறை அதிகாரியாக நடிக்க அவருக்கு நண்பராக பிரம்மானந்தம் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் பிரம்மானந்தமும் இந்தியில் செளரப் சுக்லா கமலுக்கு நண்பராக நடிக்கவிருக்கின்றனர்.


கமலின் ராஜ்கமல் நிறுவனம் லைக்காவுடன் இணைந்து தயாரிக்கும் இப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.11 ஆண்டுகளுக்குப்பின் கமல் படத்திற்கு இளையராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Sabash Naidu Shooting Begins Chasing Scenes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil