»   »  கமலின் அதிரடி முடிவுகளால் தள்ளிப்போகும் 'சபாஷ் நாயுடு' வெளியீடு?

கமலின் அதிரடி முடிவுகளால் தள்ளிப்போகும் 'சபாஷ் நாயுடு' வெளியீடு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சபாஷ் நாயுடு' படத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரை கமல்ஹாசன் மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம், ஸ்ருதி ஹாசன் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சபாஷ் நாயுடு'.

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வளர்ந்து வருகிறது.

விபத்து

விபத்து

காலில் ஏற்பட்ட விபத்து காரணமாக கமல்ஹாசனை மருத்துவர்கள் 1 மாத காலம் ஓய்வில் இருக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர். இதனால் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர்

ஒளிப்பதிவாளர்

இதற்கிடையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயா கிருஷ்ணனின் பணிகளில் திருப்தி இல்லாததால் தற்போது வேறு ஒரு ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்திட, கமல் திட்டமிட்டு இருக்கிறாராம்.

எடிட்டர்

எடிட்டர்

இப்படத்தில் எடிட்டராகப் பணிபுரிந்த சாபு ஜோசப்பின் மனைவிக்கு ஏற்பட்ட விபத்தால் அமெரிக்க படப்பிடிப்பில் இருந்து அவர் பாதியிலேயே கேரளா திரும்பி விட்டார். இதனால் வேறொரு எடிட்டரைத் தேட வேண்டிய சூழல் கமலுக்கு ஏற்பட்டுள்ளது.

ராஜீவ் குமார்

ராஜீவ் குமார்

ஆரம்பத்தில் சபாஷ் நாயுடுவை இயக்கவிருந்த டி.கே.ராஜீவ் குமார் உடல்நிலை காரணமாக இப்படத்திலிருந்து விலகியதால், கமல்ஹாசனே இயக்குநர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மாறுவதால் 'சபாஷ் நாயுடு' சொன்ன தேதியில் வெளியாவது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது.

English summary
Sources Said Kamal Haasan's Sabash Naidu Editor and Cinematographer Reshuffled Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil