»   »  கடலில் தத்தளித்த சதா

கடலில் தத்தளித்த சதா

Posted By:
Subscribe to Oneindia Tamil


மலையாளப் படத்தின் ஷூட்டிங்குக்காக திருவனந்தபுரம் அருகே நடுக் கடலில் நடந்த படப்பிடிப்பின்போது படகு ரிப்பேரானதால் சதா, ஜெயராம் உள்ளிட்டோர் நடுக் கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு, ஒரு வழியாக மீண்டு கரைக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

Click here for more images

அந்நியனுக்கு முன்பு இருந்த சதாவின் நிலை அம்சமாக இருந்தது. ஆனால் அந்நியனுக்குப் பிறகு அவரது நிலை மோசமாக போய் விட்டது.

ஷங்கர் படத்தில் நடித்ததால் பெரும் புகழ் பெற்று, வாய்ப்புகளை அள்ளி விடலாம் என நினைத்திருந்தார் சதா. ஆனால் எல்லாம் சாதாவாகி சோகமயமாகி விட்டார்.

புதுப் படம் எதுவும் வராததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் முயன்று பார்த்தார். எதுவும் தேறவில்லை. இந்த நிலையில் வறண்டு கிடந்த சதாவின் மார்க்கெட்டில் சின்ன மழையாக உன்னாலே உன்னாலே வந்து ஆறுதல் கொடுத்தது.

இருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வழக்கம் போல வராமல் கடுப்பாக்கி விட்டது சதாவை.

காத்திருந்து வெறுத்துப் போன (கருத்தும் போன) சதா, தற்போது மலையாளப் படவுலகில் பெரும் பாடுபட்டு ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

விஜயன் இயக்கத்தில் ஜெயராம் ஹீரோவாக நடிக்கும் நாவல் என்ற படத்தில் சதாதான் நாயகி. இப்படத்தின் ஷூட்டிங், திருவனந்தபுரம் அருகே நடுக்கடலில் உள்ள தீவில் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது.

படப்பிடிப்பு முடிந்த பின்னர் சிறு படகுகளில் ஒவ்வொரு குழுவாக படப்பிடிப்புக் குழுவினர் கரைக்குத் திரும்பினர். ஜெயராம், சதா, சதாவின் தாயார், விஜயன் ஆகியோர் ஒரு படகில் கரைக்குக் கிளம்பினர்.

அந்த நேரம் பார்த்து படகு பழுதாகி விட்டது. அப்போது நன்கு இருட்டி விட்டதாம். இதனால் ஜெயராம், சதா உள்ளிட்டோர் பீதியாகி விட்டனர். குறிப்பாக சதாவும், அவருடைய அம்மாவும் ரொம்பவே பயந்து போயுள்லனர்.

மற்ற படகுகள் எல்லாம் போய் விட்டது. இவர்களது படகு மட்டும் நடுக் கடலில் அனாதரவாக நின்றுள்ளது. நேரம் ஆக ஆக சதாவும், அவரது அம்மாவும் அழ ஆரம்பித்து விட்டார்களாம்.

அவர்களை ஜெயராமும், விஜயனும் சமாதானப்படுத்தி ஒன்றும் ஆகாது, பயப்படாமல் இருங்கள் என்று ஆறுதல் படுத்தியுள்ளனர். பின்னர் விஜயன் தன்னிடமிருந்த செல்போன் மூலம் கரையில் இருந்த படப்பிடிப்புக் குழுவினரைத் தொடர்பு கொண்டு நட்டாற்றில் இருப்பதை விளக்கியுள்ளார்.

இதையடுத்து இன்னொரு படகு கடலுக்குள் விரைந்து வந்து சிக்கித் தவித்த அனைவரையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்ததாம். அதன் பின்னரே சதாவும், அவரது தாயாரும் சகஜ நிலைக்குத் திரும்பினர். இருந்தாலும் இன்னும் கூட அவர்களுக்குப் பயம் முழுமையாக நீங்கவில்லையாம்.

Read more about: sadha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil