»   »  அப்பாவுக்கு 5, அம்மாவுக்கு 2!

அப்பாவுக்கு 5, அம்மாவுக்கு 2!

Subscribe to Oneindia Tamil

அப்பா, அம்மாவுக்கு பக்காவாக ஷிப்ட் போட்டு ஷூட்டிங்குக்கு அழைத்து வருகிறார் சதா.

அந்நியனுக்குப் பிறகு அடியோடு முடங்கிப் போன சதா மறுபடியும் கோலிவுட்டில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளார்.

கடைசியாக அவர் நடித்த உன்னாலே உன்னாலே படம் சதாவுக்கு லேசான நிம்மதியைக் கொடுத்துள்ளது. தற்போது லீலை படத்தில் மனதுக்குப் பிடித்த மாதவனுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சதாவுக்கு 4 வயதுக் குழந்தையின் அம்மாவாக நடிக்கும் கேரக்டராம். முதலில் இந்த வேடத்தில் நடிப்பது குறித்து நிறையவே யோசித்தாராம். ஆனால், கேரக்டர் குறித்து இயக்குநர் விரிவாக விளக்கிய பின்னர் சமாதானமாகி நடிக்க முடிவு செய்தாராம்.

சதாவுடன் முன்பு அவரது அப்பாதான் துணைக்கு வருவார். ஆனால் இப்போது அம்மா அடிக்கடி வருகிறார். அப்பா துணைக்கு வரும்போதெல்லாம் அவரை நெருங்கிப் பேசுவதற்கு யூனிட்டாரே கூட பயப்படுவார்களாம். காரணம் அப்பாவின் கண்டிப்புதான்.

பத்திரிக்கை நிருபர்களோ பேட்டி எடுக்க ரொம்பவே கஷ்டப்படுவார்கள். ஆனால் சதாவுடன் அம்மா வரும்போது இந்த கெடுபிடி குறைந்திருக்கிறதாம்.

ஏன் இந்த திடீர் மாற்றம் என்று சதாவிடம் கேட்டால், அம்மா வேலை பார்க்கிறார். அதனால் முன்பு அடிக்கடி அவரால் வர முடியவில்லை. ஆனால் அம்மாவும் உடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதனால் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஷிப்ட் போட்டுக் கொடுத்து விட்டேன்.

வாரத்தில் ஐந்து நாட்கள் அப்பா என்னுடன் வருவார். அம்மாவுக்கு விடுமுறை கிடைக்கும் இரண்டு நாட்களில் என்னுடன் வருவார். இதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று இரண்டு பேருக்கும் கண்டிஷனாக சொல்லி விட்டேன் என்கிறார் புன்னகையுடன்.

யார் கூட வருகிறார் என்பது இப்போது பிரச்சினை இல்லை, பட வாய்ப்புகளும் கூடவே வருகிறதா என்பதுதான் முக்கியம்.

Please Wait while comments are loading...