»   »  'மலர் டீச்சர்' நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லையாம்... சக நடிகரே குற்றச்சாட்டு!

'மலர் டீச்சர்' நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லையாம்... சக நடிகரே குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'பிரேமம்' படத்தின் மூலம் மலர் டீச்சர் என ரசிகர்கள் கொண்டாடிய சாய் பல்லவி தற்போது 'கரு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சாய் பல்லவி அடாவடியாகவும், சீன் போடும் விதமாகவும் நடந்துகொள்வதாக 'கரு' படத்தின் ஹீரோ குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதற்கு முன்பு நானியுடன் சாய் பல்லவி நடித்த போது இதே போல ஒரு குற்றச்சாட்டு எழுந்து, இருவருக்கும் கருத்து வேறுபாடாகி நானி ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பியதாகக் கூறப்பட்டது.

சாய் பல்லவி

சாய் பல்லவி

அறிமுகமான முதல் படமான 'பிரேமம்' படத்திலேயே அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாய்பல்லவி. ஆனால் அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், மலையாளத்திற்கு முக்கியத்துவம் தராமல் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில்

தமிழில்

தற்போதுதான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகும் இந்தப்படத்தில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார்.

கரு

கரு

'கரு' படத்தில் நடித்தபோது சாய் பல்லவி செட்டில் ஓவர் பந்தா காட்டியதாகவும் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நாக சவுர்யா.

கர்வமாக நடந்துகொள்கிறார்

கர்வமாக நடந்துகொள்கிறார்

'ஃபிடா' படம் ஹிட்டாகி சாய் பல்லவிக்கு பெயர் வாங்கி தந்தது உண்மை தான். ஆனால், அந்தப்படத்தின் வெற்றிக்கு அவர் மட்டுமே காரணம் என்பதுபோல நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார் நாக சவுர்யா.

நானியை கோவமாக்கினார்

நானியை கோவமாக்கினார்

இதேபோல 'மிடில் கிளாஸ் அப்பாயி' படத்தின் படப்பிடிப்பிலும் சாய் பல்லவி இப்படி நடந்துகொண்டதால் அதன் ஹீரோ நானி கோபத்தில் செட்டை விட்டே கிளம்பிச் சென்றதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Sai Pallavi, who is celebrated as 'Malar teacher' through 'Premam' is currently acting in the movie 'Karu'. Naga shaurya, thhe hero of the film 'Karu' has accused sai pallavi. "Sai pallavi unruly behaviors on shooting spot", Naga shaurya said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil