»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

"ராஜ்ஜியம்" படத்தில் நடித்ததற்கு விஜய்காந்துக்கு இன்னும் முழுச் சம்பளம் வழங்கப்படாததால் "ஐ லவ் யூ டா" படம்கடைசி நேரத்தில் ரிலீஸ் செய்யப்படவில்லை.


இரு படங்களையும் தயாரித்தவர் மனோஜ்குமார் தான். ஆனால் "ராஜ்ஜியம்" படத்திற்காக விஜயகாந்த்திற்குபாதிக்கு மேல் சம்பளப் பாக்கியை வைத்துள்ளார் மனோஜ்குமார்.

அதை பைசல் செய்யாமல் ராஜூ சுந்தரம்- சிம்ரனை வைத்து "ஐ லவ் யூ டா" படத்தை எடுத்தார் மனோஜ்குமார்.

அப்போது விஜய்காந்த் தலையிட்டு என் பணத்தைத் தராமல் அடுத்த படம் எடுப்பதா என்று தகராறு செய்ய,உங்களுக்கு பணத்தை செட்டில் செய்துவிட்டுத் தான் ஐ லவ் யூ டாவை ரிலீஸ் செய்வேன் என்று மனோஜ்குமார்உறுதியளித்தார்.

மனோஜ்குமாரின் வாய் வார்த்தையை நம்பாத விஜய்காந்த், அதை அப்படியே எழுதியும் வாங்கிக் கொண்டார்.ராஜ்ஜியம் கொடுத்த அடியால் நொந்து நூலாகி இருந்த மனோஜ்குமார் அடுத்த படத்தை எடுக்கும் அவசரத்தில்விஜய்காந்துக்கு எழுதியும் தந்தார்.


ஐ லவு யூ டா படத்தை ராஜூ-சிம்ரனின் நிஜக் காதலை வைத்துத் தான் தயாரித்தார் மனோஜ்குமார். ஆனால்,படத்தை எடுத்து முடிப்பதற்குள் காதலும் முடிந்துவிட்டது. இதனால் இந்த படத்தில் மீது வினியோகஸ்தர்களுக்குஇருந்த ஆர்வமும் வடிந்துவிட்டது.

ஆனால், அதையும் மீறி படத்தை வெளியிட முயற்சிகள் எடுத்தார். தியேட்டர்களுக்கு பெட்டிகளும் கூட போய்ச்சேர்ந்தன. ஆனால், விஜய்காந்த் திடீரென குறுக்கே வர பட ரிலீஸை உடனே நிறுத்த வேண்டிய நிலைக்கு வந்தார்மனோஜ்குமார்.

உறுதியளித்தபடி விஜயகாந்த்தின் சம்பளப் பாக்கியை மனோஜ்குமார் தரவில்லை. இதனால் படத்தையும் வெளியிடவிடமாட்டேன் என்று விஜய்காந்த் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

ராஜ்ஜியம் படம் 10 நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் ஓடி 11வது நாள் தியேட்டர்களைவிட்டு ஓடியதுகுறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் படத்தில் நடித்ததற்காக ரூ. 75 லட்சம் வரை விஜய்காந்த் குறைத்துக்கொண்டதாகத் தெரிகிறது.

அப்படி இருந்தும் மீதித் தொகையை மனோஜ்குமார் தராதது தான் பிரச்சனையே.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil