»   »  குத்து நாயகியான சமிக்ஷா

குத்து நாயகியான சமிக்ஷா

Subscribe to Oneindia Tamil

கிளாமர் நாயகியாக அறிமுகமாகி, இப்போது குத்தாட்ட நாயகியாக மாறியுள்ளார் சமிக்ஷா.

வடக்கத்தி சமிக் ஷாவுக்கு அறிந்தும் அறியாமலும் மூலம் கோடம்பாக்கம் ரெட் கார்ப்பட் விரித்துக் கொடுத்து வரவேற்றது. ஆனால் கிடைத்த வரவேற்பை கிறுக்குத்தனமாக தவற விட்டு விட்டு வாய்ப்பிழந்த நடிகைகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் சமி.

முதல் படத்திலேயே முயங்க முயங்க கவர்ச்சி காட்டி கதகளி ஆடினார் சமி. இதனால் கிளாமர் நாயகியாக அறியப்பட்ட அவர் தெரிந்தோ, தெரியாமலோ ஆண் நண்பர்களுடன் அட்டகாச நட்பை இறுக்கமாக வைத்திதருந்ததால் அவரை அண்டவே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பயந்தார்கள்.

அப்படியும் ஓரிரு படங்கள் கிடைத்தன. ஆனாலும் 2வது நாயகி வாய்ப்புதான் வந்தது. இப்படியும் அப்படியுமாக தள்ளாட்டம் போட்டு வந்த சமி, திடீரென சஹாரா டிவிக்குத் தாவினார். அங்கு இந்தியில் தயாரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியில் நடிக்க ஒப்பந்தம் போட்டு டிவி நடிகையாக மாறினார்.

இந்த நிலையில்தான் கரண் ஹீரோவாக நடிக்கும் தி.நகர் படத்தில் குத்தாட்டம் போடும் வாய்ப்பு வந்தது. வருவது வரட்டும் என்று துணிந்து ஒத்துக் ெகாண்டு உலுக்கலான ஒரு ஆட்டத்தைப் போட்டார் சமிக்ஷா.

இந்த ஆட்டத்தைக் கேள்விப்பட்ட அர்ஜூன் தனது மருதமலை படத்திலும் அதுபோலவே ஒரு ரண்டக்க ரண்டக்க போட முடியுமா என ஆவலோடு கேட்டாராம். அட என்று ஆச்சரியப்பட்ட சமி, உடனே ஓ.கே. சொல்ல, சூட்டோடு சூடாக கூட்டிக் ெகாண்டு போய் குத்தாட்டம் போட வைத்து சுடச் சுட ஷூுட் செய்து விட்டாராம் அர்ஜூன்.

இப்போது மேலும் ஓரிரு படங்களில் குத்தாட்டம் போட வாய்ப்பு வந்துள்ளதாம். குறைந்த செலவில் நிறைந்த லாபம் என்பதால் பேசாமல் இப்படியே குத்தாட்ட நாயகியாக காலம் தள்ளலாமா என்பது குறித்து சிந்தித்து வருகிறாராம் சமிக்ஷா.

தெளிந்தும், புரிந்தும் நல்ல முடிவா எடுங்க

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil