»   »  சிக்கிய சந்தியா - தாரிகா

சிக்கிய சந்தியா - தாரிகா

Subscribe to Oneindia Tamil

ஷீட்டிங்கின் போது ஆடை மாற்றப் போன இடத்தில், அறைக்குள் சிக்கித் தவித்து மீண்டுள்ளனர் சந்தியாவும், தாரிகாவும்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாட்டுச் சரக்கு நச்சுன்னுதான் இருக்கு பாட்டுக்கு கும்மாவான குத்தாட்டம் போட்டவர் தாரிகா. இவரும், காதல் நாயகி சந்தியாவும், மஞ்சள் வெயில் படத்தில் நடித்து வருகின்றனர்.

ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் நாயகன் பிரசன்னா. இப்படத்தின் ஷூட்டிங் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சகாரியா கார்டனில் நடைபெற்று வருகிறது.

ஒரு காட்சியில் நடித்து முடித்த சந்தியாவும், தாரிகாவும் அடுத்த காட்சிக்கு வேறு காஸ்ட்யூம் மாற்ற வேண்டியிருந்தது. இதற்காக டிரஸ் மாற்ற ஒரு அறைக்குச் சென்றனர்.

முதலில் கதவைத் திறந்து வைத்தபடி டிரஸ்ஸை மாற்றியுள்ளனர். ஆனால் சில விநாடிகளில் அந்தக் கதவு தானாக மூடிக் கொண்டு விட்டது. டிரஸ் மாற்றிய பிறகு கதவைத் திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் பயந்து போன இருவரும் கதவைத் திறக்குமாறு கூறி குரல் கொடுத்துள்ளனர்.

ஆனால் அவர்களின் குரல் வெளியில் உள்ளவர்களுக்கு கேட்கவில்லை. இதையடுத்து சந்தியாவும், தாரிகாவும் தங்களது செல்போன் மூலம் இயக்குநர் ராஜாவைத் தொடர்பு கொண்டு அறைக்குள் சிறைபட்டுக் கிடப்பதை சொல்லியுள்ளனர்.

ராஜாவும் விரைந்து வந்து கதவைத் திறக்க முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை. படப்பிடிப்புக் குழுவினரும் மேட்டர் அறிந்து விரைந்து வந்து ஆளாளுக்கு கை வைத்து கதவைத் திறக்க முயற்சித்தனர். ஆனால் திறக்கவே இல்லை அந்தப் பிடிவாதக் கதவு.

இதையடுத்து ஒரு சாவி பூட்டுக்காரரை கூப்பிட்டு முயற்சிக்கச் சொன்னார்கள். சந்தியாவும், தாரிகாவும் சிக்கித் தவிப்பை புரிந்து கொண்ட அவரும் படு மும்முரமாக முயற்சித்துப் பார்த்தார். அவரது முயற்சியும் பலிக்கவில்லை.

இது கதைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்ட ராஜா, அந்த வீட்டுக்கு உரிமையாளரைத் தொடர்பு கொண்டார். அவரும் இவ்வளவுதானா, இந்தா பிடியுங்கள் டூப்ளிகேட் சாவியை என்று டூப்ளிகேட் சாவியைக் கொடுத்தனுப்பினார்.

அந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்தபோது படாரென்று திறந்து கொண்டது அந்தக் கதவு. கிட்டத்தட்ட 4 மணி நேரமாக நான்கு சுவர்களுக்குள் சிக்கித் தவித்த சந்தியாவும், தாரிகாவும், அய்யோடா, அம்மாடா என்று பெருமூச்சு விட்டபடி வெளியே வந்தனர்.

பதட்டத்திலும், பயத்திலும் இருவருக்கும் குற்றால அருவியில் குளித்தது போல வியர்வையில் நனைந்து போய் நடுங்கியபடி இருந்தனர். இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதே இல்லை. பயந்தே போய் விட்டோம் என்றனர்.

அடப் பாவமே!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil