»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசன் எழுதி, இயக்கும் "சண்டியர்" படம் முழுக்க முழுக்க தேனி பகுதியில் படமாக்கப்படஉள்ளது.

இதன் தொடக்க விழா மதுரையில் நடைபெறுகிறது. மதுரையில் நடக்கும் முதல் படத் தொடக்க விழாஇது தான். சென்னை ஸ்டுடியோக்களில் மட்டுமே இதுவரை படப் பூஜைகளும் தொடக்கவிழாக்களும் நடந்து வந்தன. அந்த ஆதிகால மரபை உடைத்துள்ளார் கமல்.

கமலின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில்கமலும் அவருடைய சகோதரர் சந்திரஹாசனும் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

இன்று மாலை 6.45 மணிக்கு மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் "சண்டியர்" படத்தின்தொடக்க விழா நடைபெறுகிறது.

இதில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன், திரைப்படவிநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சிந்தாமணி முருகேசன், தமிழக திரையரங்கு உரிமையாளர்சங்கத் தலைவர் அண்ணாமலை, சென்னை மாவட்டத் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர்அபிராமி ராமநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

"சண்டியர்" திரைக்கதை புத்தகத்தின் பிரதியை ஏவி.எம். சரவணன் வெளியிடுகிறார். அதைஇயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பெற்றுக் கொண்டு அதைத் திரைப்படக் குழுவினரிடம்வழங்குவார்.

தொடக்க நாளான நாளையே "சண்டியர்" படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது. இதற்காக அந்தக்குழு உடனடியாக தேனி விரைகிறது. தேனியில் ஒரு மாதம் சூட்டிங் நடக்கப் போகிறதாம்.

தனிமையில் அமர்ந்து படு "கேர்புல்"லாக திரைக்கதையைச் செதுக்கியுள்ளாராம் கமல். எப்போதும்வித்தியாசமாகவே சிந்தித்துப் பழகிப் போய்விட்ட கமலின் மற்றொரு விருந்துதான் "சண்டியர்".

"விருமாண்டித் தேவன்" என்ற ஆக்ரோஷமான கேரக்டரில் நடிக்கிறார் கமல். அரிவாளும் கையுமாகஅலையப் போகிறாராம் கமல். நெப்போலியன் "நல்லம நாயக்கன்" என்ற வேடத்தில் வருகிறார்.இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இது (நெப்ஸ் வேடத்தில் முதலில் சத்யராஜ்தான் நடிக்கஇருந்தார்).

"பேய்க்காமன்" என்ற இன்ஸ்பெக்டர் ரோலில் வருகிறார் நாசர். இவர்களைத் தவிர பசுபதி என்றபுதுமுக நடிகரும் இப்படத்தில் உள்ளார். "கொத்தாளத் தேவர்" என்ற பாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

"அன்னலட்சுமி" என்ற கேரக்டரில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடிக்கிறார். "ராசுக் காளை"யாகபாலாசிங் வருகிறார். மேலும் சில புதுமுக நடிக, நடிகைகள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்திற்கு இசை அமைத்து உயிர் கொடுக்கப் போகிறவர் "இசைஞானி" இளையராஜா. சிலபாடல்களையும் அவரே எழுதியுள்ளார். கமலும் சில பாடல்களைப் புனைந்துள்ளார். மேலும்முத்துலிங்கமும் இப்படத்தில் பாட்டுக் கட்டியுள்ளார்.

சண்டைக் காட்சிகளை விக்ரம் தர்மா கவனித்துக் கொள்ள, கேசவ் பிரகாஷ் காமிராவைக்கையாள்கிறார்.

இப்படத்திற்காக கமலுக்கு சிறப்பு மேக்கப் போட மும்பையிலிருந்து அனில் பெம்ப்ரிகர் என்பவர்வருகிறார். கலை - பிரபாகரன்.

"கலை வெறி" கொண்டு "அடங்காமல்" அலையும் கமலின் "சண்டியர்" வெற்றி பெற வாழ்த்துவோம்.தமிழர்களுக்கு இன்னொரு தேவர் மகன் கிடைக்கப் போகிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil