»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

தேனி:

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் சண்டியர் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று முதல் மீண்டும்தொடங்குவதாக இருந்தது. ஆனால், இதனால் தேனியில் ஜாதிக் கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டதால்சூட்டிங்கை கமல் ரத்து செய்துவிட்டார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. கமல்ஹாசனுடன்,அபிராமி, நெப்போலியன், நாசர், சங்கிலி முருகன், நெப்போலியன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இளையராஜாஇசையமைக்கிறார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க கமல்ஹாசன் முடிவுசெய்துள்ளார். முதல் கட்டமாக சில ஷாட்கள் எடுக்கப்பட்டன. இதன் பின்னர் கதையை மேலும் வலுவாக்க முடிவுசெய்து சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இன்று முதல் மீண்டும் சூட்டிங் தொடங்குவதாக இருந்தது. இதற்கான இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டன. துணை நடிகர்களை தேனி பகுதியிலேயே கமல்ஹாசனும் கெளதமியும் தேர்வு செய்தனர்.

இந்தப் படத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளநிலையில் படப்பிடிப்பு இன்று தொடங்க இருந்தது. படப் பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி ரூ. 50,000த்தைகமல் தரப்பில் காவல்துறைக்குக் செலுத்தப்பட்டது.

இந் நிலையில் கமல் படப் பிடிப்புக்கு பாதுகாப்புத் தரப் போவதாக மூவேந்தர் முன்னேற்றக் கழகம் அறிவித்தது.மேலும் கமலுக்கு பக்கபலமாக, பாதுகாப்பாக இருக்கப் போவதாக தமிழ்நாடு தேவர் பேரவைதலைவர் சீனிச்சாமி தேவரும் பார்வர்ட் பிளாக் கட்சியினரும் அறிவித்தனர்.

இந் நிலையில் இன்று தேனியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அதன் தொண்டர்கள்குவியத் தொடங்கினர். இதற்கு போட்டியாக மூ.மூ.க., பார்வர்ட் பிளாக் மற்றும் தேவர்பேரவையினரும் கூட ஆரம்பித்தனர்.

இதனால் ஏடாகூடாமான சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க கூடுதல் போலீசார் தேனியில்குவிக்கப்பட்டனர்.

ஆனாலும் நிலைமை மிகவும் பதற்றமாகவே இருந்தது. சூட்டிங் நடத்தினால் புதிய தமிழகம் தொண்டர்களும் மூமூகமற்றும் தேவர் பேரவையினர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டு ஜாதிக் கலவரம் வெடிக்கலாம் என உளவுப்பிரிவினர் மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர்.

இதையடுத்து கமலிடம் வாங்கிய பாதுகாப்புக்கான பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பாதுகாப்பையும் உடனேவாபஸ் பெறுமாறு தேனி காவல்நிலையத்துக்கு சென்னையில் இருந்து தகவல் பறந்தது.

இதையடுத்து தேனி சட்டம்-ஒழுங்கு போலீசார் கமல்ஹாசனின் தயாரிப்பு நிர்வாகியைச் சந்தித்து பணத்தைத்திருப்பித் தந்தனர். மேலும் இப்போது படப் பிடிப்பு நடத்தினால் ஜாதிக் கலவரம் வெடிப்பது நிச்சயம். எனவே,அதை ரத்து செய்து விடுங்கள். நாங்களும் ஓரிரு நாட்கள் தான் சூட்டிங்குக்கு பாதுகாப்பு வழங்க முடியும்,தினந்தோறும் பாதுகாப்பு தருவதும் இயலாத செயல் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து சூட்டிங்கை கமல் ரத்து செய்துவிட்டார்.

முன்னதாக உத்தமபாளயம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரிக்குச் சொந்தமான பழைய மாணவர் விடுதிக்கட்டடத்தில் இன்று படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. படப் பிடிப்புக்காக இந்தக் கட்டடம் நீதிமன்றமாகமாற்றப்பட்டது. சூட்டிங்கைப் பார்க்க சுற்றுப் பகுதி கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் இங்கு கூடியிருந்தனர்.

ஆனால், படப் பிடிப்புக் குழு நெடு நேரம் வரை இங்கு வராததால் கூட்டம் கலைந்து சென்றது.

இந்தப் படத்துக்கு கிருஷ்ணசாமி தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசியஅவர், சண்டியர் என்ற வார்த்தைக்கு தகராறு செய்பவர், வன்முறையில் ஈடுபடுபவர் என்று அகராதியில் பொருள்உள்ளது. எனவே அந்தப் பெயருக்கு சென்சார் போர்ட் தடை விதிக்க வேண்டும் என்றார்.

ஆனால், ஏற்கனவே நடிகர் பிரேம் இயக்கி, நடித்து வர்றார் சண்டியர் என்ற பெயரில் ஒரு படம் வந்துள்ளது.எனவே டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கைக்கு சென்சார் அதிகாரிகள் செவிசாய்க்க மாட்டார்கள் என கமல்தரப்பில் கூறுகின்றனர்.

இந் நிலையில் இந்தப் படத்தின் கதை யாருடையது என்பதிலும் பிரச்சனை உருவாகியுள்ளது. கதை என்னுடையதுஎன எழுத்தாளர் வேல ராமமூர்த்தி கூறுகிறார். இயக்குனர் பாரதிராஜாவும் என்னுடையது என்கிறார். ஆனால், இதுஎன் கதை என்கிறார் கமல்.

சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய முதல் படம் இதுவாகத் தான் இருக்கும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil