»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி:

கடைசி நேரத்தில் தேனி மாவட்ட போலீஸார் பாதுகாப்பு கொடுக்க முன்வராத காரணத்தால், சண்டியர்படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

சண்டியர் படப்பிடிப்புக்காக தேனி கொண்டு வரப்பட்ட காளை

இந்த விவகாரம் தொடர்பாகப் பேச முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கமல்ஹாசன் நேரம் கேட்டுள்ளார்.

சண்டியர் படப் பிடிப்பைத் தடுத்து நிறுத்துவோம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின்எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தார் கமல். ஆனால், அந்தப் பாதுகாப்புகிடைக்கவில்லை.

இதையடுத்து கமலஹாசன் நேற்று மாலை தேனியில் இருந்து மதுரை சென்று பின்னர் இரவு 8.10 மணிக்குவிமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.

ஜெயலலிதாவை சந்திக்க முதல்வர் அலுவலகத்தில் கமல்ஹாசன் நேரம் கேட்டுள்ளார். இதுவரை அவருக்கு நேரம்ஒதுக்கப்படவில்லை.

ஏன் பாதுகாப்பு இல்லை? போலீஸ் விளக்கம்:

போதுமான போலீஸார் இருப்பு இல்லாத காரணத்தால்தான் சண்டியர் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தர முடியவில்லைஎன்று திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. குடவாலா விளக்கம் அளித்துள்ளார்.

படப்பிடிப்புக் குழுவினர் சார்பாக நடிகர் சங்கிலி முருகன், தேனி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்அமல்ராஜைச் சந்தித்து பாதுகாப்பு கோரி நேற்று முன்தினம் மனு கொடுத்திருந்தார்.

அந்த கோரிக்கைக்கு உரிய பதில் வரவில்லை. பாதுகாப்பும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து நேற்றுபடப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக திண்டுக்கல் சரக டிஐஜி குடவாலா கூறுகையில், பெரியகுளம் வங்கிக் கொள்ளை தொடர்பாகவிசாரிக்கவும், குற்றவாளிகளைத் தேடிப் பிடிக்கவும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பலபோலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல, திண்டுக்கல் மாவட்ட காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதற்கானபாதுகாப்புக்காகவும் ஏராளமான போலீஸார் அனுப்பப்பட்டு விட்டனர். இதனால் போதிய அளவில் போலீஸார்இல்லை.

சண்டியர் படப்பிடிப்புக்காக நீதிமன்றமாக மாற்றப்பட்ட உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரிக் கட்டடம்

இதனால் தான் சண்டியர் படப்பிடிப்புக்கு பாதுகாப்பு தர இயலவில்லை என்றார்.

ஆனால், படப் பிடிப்பு நடந்தால் தேனி பகுதியில் தலித்களும் தேவர் இனத்தினரும் மோதிக் கொள்ளும்பதற்றமான சூழல் இருப்பதாக உளவுப் பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனால் தான் படப்பிடிப்பைநிறுத்தும் வகையில், பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு மேலிடத்தில் இருந்து திண்டுக்கல் சரக டிஐஜிக்கு உத்தரவுவந்ததாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் இன்று காலை சென்னை வருவதாகவும், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து படப்பிடிப்புக்கு உரியபாதுகாப்பு தொடர்பாக பேசப்போவதாகவும், படப்பிடிப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பு குறித்து கமல் கவலைப்படத்தேவையில்லை என்றும் படப்பிடிப்புக்கு உரிய பாதுகாப்பை தாங்கள் கொடுப்பதாகவும் தமிழ்நாடு தேவர்பேரவை, பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவை கூறியுள்ளன.

அதே நேரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேனிபகுதிக்கு வர ஆரம்பித்துள்ளதாக உளவுத்துறை கூறுகிறது. இதனால் படப் பிடிப்பு நடந்தால் அசம்பாவிதசம்பவங்கள் நடக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil