»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

தேனி:

கமல்ஹாசனின் புதிய படத்தின் படப்பிடிப்புக்கு மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் 2வது முறையாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. கமல் உள்ளிட்ட நடிகர்,நடிகைகள் வத்தலகுண்டில் உள்ள ஹோட்டலிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

கடந்த ஒரு மாத்ததுக்கும் மேலாக படப்படிப்பு தேனி பகுதியில் நடந்து வந்தது. பிரச்சனை ஏதும்இல்லை. ஆனால், கடந்த வாரம் இங்கு சில வன்முறைக் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து படப் பிடிப்புக் குழுவினர் மீது தாக்குதல் நடக்கும் என புதிய தமிழகம் அமைப்பினர்எச்சரித்தனர். எந்த நேரத்திலும் திடீர் தாக்குதல் நடக்கலாம் என உளவுப் பிரிவு போலீசாரும்மாவட்ட போலீசாரை எச்சரித்தனர்.

மேலும் பயங்கர வன்முறைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதால், இந்தப் படம் வெளியானால்பெரும் ஜாதிக் கலவரம் வெடிக்கலாம், இதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பை இதற்கு மேலும்தொடர அனுமதிக்கக் கூடாது என புதிய தமிழகம் சார்பில் தமிழக அரசுக்கும் மனுஅனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்திக் கொள்ளுமாறு கமல்ஹாசனுக்கு உத்தரவு வந்தது. இதைத்தொடர்ந்து படப் பிடிப்பை நிறுத்தினார் கமல்.

ஆனால், இது குறித்து தேனி பகுதி நிருபர்கள் படப் பிடிப்புக் குழுவினரைத் தொடர்புகொண்டபோது, முக்கியமான கேமராவின் லென்ஸ் உடைந்துவிட்டதாகவும் இதனால் தான்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் தரப்பட்டது. ஆனால், அது பொய்யான தகவல் என்பதுஇப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

முதலில் சென்னை கேம்ப கோலா மைதானத்தில் செட் போட்டு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பைநடத்தினார் கமல். படம் தொடர்பான சர்ச்சைகள் ஓய்ந்ததையடுத்துத் தான் தேனி மாவட்டம்வத்தலகுண்டு மற்றும் சுற்று வட்டாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

4 நாட்களுக்கு முன் முன் படப் பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்த போலீஸார் , உங்கள் மீது தாக்குதல்நடத்தும் திட்டத்தில் ஒரு கும்பல் உள்ளது. எனவே படப்பிடிப்பை கேன்சல் செய்யுங்கள் என்றுஉத்தரவிட்டதாகவும் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு கேன்சல் ஆனது.

இந் நிலையில் நேற்று தர்மத்துப்பட்டி என்ற இடத்தில் மீண்டும் படப்பிடிப்பு நடந்தது. அப்போதும்போலீஸார் வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும், எனவேஉடனடியாக ரத்து செய்யுங்கள் என்றும் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் அப்செட் ஆகிப் போன கமல்ஹாசன் படப்பிடிப்புக் குழுவினரை பேக்கப் செய்யச்சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். அனைவரும் தற்போது வத்தலகுண்டில் உள்ள ஹோட்டலில்தங்கியுள்ளனர். கமல்ஹாசனும் அங்கேயேதான் உள்ளார்.

படப்பிடிப்புக்கு அடிக்கடி இடையூறு ஏற்படுவதால், படப்பிடிப்பை தொடர்ந்து இந்தப்பகுதியிலேயே நடத்தலாமா அல்லது வேறு இடத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து கமல் யோசித்துவருவதாகத் தெரிகிறது.

அவரிடம், சிலர் பாண்டிச்சேரி பகுதியில் தற்போது படப்பிடிப்புகளுக்கு அந்த மாநில அரசின்சார்பில் நல்ல பாதுகாப்பு தரப்படுவதால், அங்கு வைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைகூறியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், அந்தப் பகுதியில் திருமாவளவனி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கு நல்லசெல்வாக்கு இருப்பதால் கமல் யோசனையில் இருப்பதாகத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil