»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

தேனி:

சண்டியர்(?) படத்தின் படப் பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாம். பாக்கியுள்ள சில காட்சிகளைசெங்கல்பட்டு அருகே நடத்த திட்டமிட்டுள்ளாராம் கமல்.

இந்தப் படத்தின் (சண்டியர்) படப்பிடிப்பு சென்னை மற்றும் தேனி மாவட்டத்தின் சில பகுதிகளில் நடந்தது.

அதன்பிறகு சில சர்ச்சைகள் ஏற்பட்டதால் தேனி மாவட்டத்தில் பாதியில் படப்பிடிப்பு நின்றது.

இந் நிலையில் சென்னையிலேயே பெரும்பாலான காட்சிகளை செட் போட்டே எடுத்து முடித்து விட்ட கமல்ஹாசன்,படத்தின் சொச்ச காட்சிகளை செங்கல்பட்டு அருகே வைத்து முடிக்கவுள்ளாராம்.

செங்கல்பட்டு அருகே கமலுக்கு சொந்தமான பல ஏக்கர் காலியிடம் உள்ளது. இங்குதான் மருதநாயகம்படத்திற்காக வாங்கப்பட்ட குதிரைகளை அவர் வளர்த்து வந்தார். இந்த இடத்தில் தற்போது புதிய படத்தின் மீதிக்காட்சிகளை ஷூட் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

விரைவில் படம் முடிந்து விடுமாம். தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு பிரச்சனைகளில் சிக்கியதால்படப்பிடிப்பு இழுத்துவிட்டது. இப்போது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் கமல்.

அட்டகாசமான பாடல்களைப் போட்டுக் கொடுத்துள்ளாராம் இசைஞானி இளையராஜா. இதனால் இசையின்அருமை பாதிக்கப்படாத வகையில் மெனக்கெட்டு பாடல்களுக்கான காட்சிகளை மிகுந்த கவனத்துடன் படமாக்கிவருகிறார் கமல்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil