»   »  நேபாளி சங்கீதா

நேபாளி சங்கீதா

Subscribe to Oneindia Tamil

பரத், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடிக்கும் நேபாளியில், உயிர் சங்கீதாவும் இப்போது தலை காட்டுகிறாராம்.

பரத் வித்தியாசமான கெட்டப்பில் கலக்கும் புதிய படம் நேபாளி. நேபாளத்து ஆளாக படு வித்தியாசமாக பரத் நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடி போடுகிறார் மீரா ஜாஸ்மின்.

இந்தப் படத்தில் நேபாள நாட்டு ஆசாமியாக கெட்டப் சேஞ்ச் செய்ய மும்பையிலிருந்து மேக்கப்மேனை வரவழைத்தார்களாம்.

இப்போது இப்படத்தில், புதிதாக சங்கீதாவும் சேர்ந்துள்ளார். கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் சங்கீதா. அதுவும் நடிகை சங்கீதாவாகவே நடிக்கிறாராம்.

என்ன இது சங்கீதா திடீரென்று என்று விஷயத்தைக் கிளறினால், இப்படத்தின் இயக்குநர் துரை, சங்கீதாவுக்கு நெருங்கிய நண்பராம், நல்ல நண்பராம். அந்த நட்பு காரணமாக, சங்கீதாவை அணுகி, கெஸ்ட் ரோல் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம் துரை.

இதை தட்டாத சங்கீதா நடிகை சங்கீதாவாகவே தலை காட்டுகிறாராம். சங்கீதாவின் ரோல் என்ன என்பதை ரகசியமாக வைத்துள்ளார் துரை. இந்த கெஸ்ட் ரோல் செய்வதற்காக காசு, பணம் எதையும் வாங்கிக் கொள்ளவில்லையாம் சங்கீதா.

நட்புக்கு மரியாதை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil