»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரும்பாலும் நடிகைகள் படமெடுத்தால், இயக்குநராகவோ, நடிகராகவோ இருக்கும் தங்களது கணவரைவைத்துத்தான் படமெடுப்பார்கள். கையைச் சுட்டுக் கொள்வார்கள்.

ஆனால் சித்தி ராதிகாவே, சித்தப்பா சரத்குமாரும்தான்) கதாநாயகனாக்காமல் முற்றிலும் புதுமுகங்களை வைத்துஜெய்ராம் என்ற படமெடுக்கிறார். சரத்குமாருக்கு இந்தப் படத்தில் கெளரவ வேடம்தானாம்.

மலேசியப் பெண்களை தவறாகச் சித்தரித்ததாக ராதிகா நடிக்கும் அண்ணாமலை சீரியல்பிரச்சனைக்குள்ளானபோது, சீரியல் டைரக்டர் சி.ஜே.பாஸ்கரைத் தூக்கி விட்டு பிரச்சனை கிளப்பியவர்களின்வாயை அடைத்தார் ராதிகா.

இப்போது சின்னத்திரை பக்கமிருந்த தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தை பெரிய திரைப்பக்கம்அழைத்து வந்திருக்கிறார். படத்தில் ஹீரோ நவதீப் மற்றும் ஹீரோயின் சந்தோஷி இருவரும் புதுசு. இவர்களுடன்ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், மதன்பாப், கவர்ச்சிக்கு அபிநயஸ்ரீ, வெண்ணிற ஆடை மூர்த்தி, சிட்டிபாபுஆகியோரும் நடிக்கிறார்கள்.


தெலுங்குப் படவுலகில் சூப்பர் ஹிட் படங்களைத் தொடர்ந்து கொடுத்த தேஜா இந்தப் படம் மூலம் தமிழில் எண்ட்ரீஆகிறார். பாபா பட தோல்விக்குப் பின் ரஜினி கதை கேட்ட எத்தனையோ டைரக்டர்களில் இவரும் ஒருவர்.ரஜினியின் எதிர்பார்ப்புக்கு என்னால் கதை பண்ண முடியவில்லை என்று அண்மையில் வெளிப்படையாக பேட்டிகொடுத்தார்.

பின்பு ரஜினிக்காக ரெடி பண்ணிய கதையை விஜயகாந்துக்காக பண்ணப்போவதாக பேச்சு கிளம்பியது.விஜயகாந்த் கஜேந்திரா படத்தில் பிஸியாகிவிட, இப்போது ராதிகா இவரை தமிழுக்குக் கூட்டி வந்துள்ளார்.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே மலரும்காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான் கதை என்கிறார்கள். இப்படத்துக்காக முதன்முறையாகபாகிஸ்தானில் படமெடுக்கப் போகிறார்களாம்.

பாகிஸ்தான் கதையின் களமாக வருவதால் அது தொடர்பான காட்சிகளை அங்கேயே நடத்த முடிவு செய்துள்ளனர்.லாகூர் மற்றும் கராச்சி நகரங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கி ஒரு சுற்று படப்பிடிப்பையும்முடித்துவிட்டார்கள்.

படத்தில் கதாநாயகன், கதாநாயகியரோடு 55 புதுமுகங்கள் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனுப் ரூபனும்புதுமுகம்தான். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

வந்தே மாதரம் என்ற பாடல் ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் 7,000 பேரை வைத்து பிரம்மாண்டமாகபடமாக்கியுள்ளார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil