»   »  திக்..திக்.. டீச்சர் சரண்யா

திக்..திக்.. டீச்சர் சரண்யா

Subscribe to Oneindia Tamil

பாக்யராஜின் புதல்வி சரண்யா திக்..திக்.. படத்தில் டீச்சராக நடிக்கிறார்.

பாக்யராஜ் தனது மகளை ஹீரோயினாக்கிய பாரிஜாதம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார்.

முதல் படம் என்று யாரும் சொல்ல முடியாத அளவு சிறப்பாகவே நடித்தார் சரண்யா. ஆனால், படம் பெரிய அளவில் போகவில்லை.

இதனால் தமிழில் அடுத்து எந்த வாய்ப்பும் வரவில்லை. கையில் ஒரு படமும் இல்லாமல் வருத்தத்தில் இருந்த சரண்யாவுக்கு மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்தார். இதனால் மலையாளத்தில் சரண்யாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இந் நிலையில் கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர் அடுத்ததாக திக்..திக்.. என்ற படத்தை இயக்குகிறார்.

இது ஒரு திரில்லர் கதையாம்.

இதில் டீச்சராக நடிக்கிறார் சரண்யா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil