»   »  தொடங்கியது நம் நாடு

தொடங்கியது நம் நாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்க, சுரேஷ் இயக்க, ரமேஷ் பாபு தயாரிக்க உருவாகும் நம்நாடு படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

போக்கிரி படத்தைத் தயாரித்த ரமேஷ் பாபு தயாரிக்க நம்நாடு உருவாகிறது. அரசு, கம்பீரம் ஆகிய படங்களில் சரத்குமாரை அட்டகாசமாக உலவ விட்ட சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

சரத்குமாருக்கு இந்தப் படம் ரொம்ப முக்கியமானது. காரணம், கூடிய விரைவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கப் போகிறார் சரத்குமார். அதற்கு அச்சாரமாக இப்படத்தை நினைக்கிறார் சரத். முதலில் படத்திற்கு அழகிரி என்றுதான் பெயர் சூட்டியிருந்தார் சரத். ஆனால் அப்பெயரை பதிவு செய்ய பஞ்சாயத்துக் கிளம்பியதால் நம் நாடு என வாத்தியார் படப் பெயரையே சூட்டி விட்டார்.

மலையாளத்தில் வெளியான லயன் படத்தின் ரீமேக்தான் நம்நாடு. ஆனால் தமிழ் ஆடியன்ஸுக்கேற்றார் போல திரைக்கதையில் பெரும் மாற்றங்களச் செய்துள்ளாராம் சுரேஷ். குறிப்பாக சரத்துக்கேற்ப சில முக்கிய காட்சிகளையும் டிசைன் செய்து வைத்துள்ளாராம்.

படத்தில் பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சமே இல்லை என்று கூறப்படுகிறது. சரத்குமாரின் வருங்காலத் தொண்டர்கள் பயன்படுத்துவற்கு வாகாக பல வசனங்ளை படம் முழுக்க இறைக்க முடிவு செய்துள்ளனராம்.

சரத்துக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கப் போகும் கல்லூரி படத்துக்கு ஏற்கனவே கால்ஷீட் கொடுத்து விட்டதால் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க சரத் படத்திலிருந்து விலகி விட்டாராம் தமன்னா.

இதனால் இப்போது கார்த்திகாவை புக் பண்ணியுள்ளனர். இந்த கார்த்திகா, மலையாளத்து தாரகை. ஏற்கனவே பிரஷாந்த்துடன் புலண் விசாரணை -2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கார்த்திகா.

நம்நாடு மூலம் தமிழ்நாட்டை நம் நாடாக்கி விடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் கார்த்திகா. அதே நம்பிக்கையில்தான் சரத்தும் உள்ளார்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil