»   »  அசின்-எம்.ஜி.ஆர்- நம்பியார்

அசின்-எம்.ஜி.ஆர்- நம்பியார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலகல இயக்குநர் ஷக்தி சிதம்பரம் அடுத்து இயக்கப் போகும் படத்துக்கு எம்.ஜி.ஆர். - நம்பியார் என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்.

சத்யராஜின் மார்கெட் டவுன் ஆக இருந்தபோது அவரை வைத்து என்னம்மா கண்ணு மூலம் பெரிய பிரேக் கொடுத்தவர் ஷக்தி சிதம்பரம். இந்தப் படத்தைத் தொடர்ந்து மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார் சத்யராஜ். வயது போன காலத்தில் 2வது ரவுண்டை படு ரவுசாக ஆரம்பித்தார்.

தற்போது எஸ்.ஜே.சூர்யாவை வைத்து வியாபாரி படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள ஷக்தி சிதம்பரம், அந்தப் படம் திருப்திகரமாக ஓடுவதால் சந்தோஷமடைந்துள்ளார்.

அந்த சூட்டோடு, அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். எம்.ஜி.ஆர். -நம்பியார் என புதுப் படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார்.

இப்படத்திலும் சத்யராஜ்தான் ஹீரோ. கூட நடிக்கவிருப்பவர் பார்த்திபன். ஷக்தியுடன், பார்த்தி இணைவது இதுவே முதல் முறை. வழக்கமான நக்கல், நையாண்டி, லொள்ளு, லோலாயி என எல்லாமே இப்படத்திலும் இருக்குமாம்.

இப்படத்தையும் ஷக்தியே தயாரிக்கப் போகிறாராம். அத்தோடு நிற்காமல், பிற இயக்குநர்களை வைத்தும் படங்களைத் தயாரிக்கப் போகிறாராம்.

முதல் படமாக பழனி என்ற படத்தைத்த தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் ஷக்தி. இதில் பரத் ஹீரோவாக நடிக்கிறார். பேரரசுதான் படத்தை இயக்கப் போகிறார். அசினை இதில் நாயகியாக்க திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் அவர் கிடைப்பாரா என்றுதான் தெரியவில்லை.

என்ன அது எம்.ஜி.ஆர் -நம்பியார் என வித்தியாசமான பெயர் என்று ஷக்தியிடம் கேட்டால், இது வேடிக்கை நிறைந்த, ஜாலியான படம். படம் முழுக்க ரசிகர்களை லயிக்க வைக்கும் வகையில் காட்சிகளைப் பின்னப் போகிறோம். படத்தின் டைட்டிலே என்ன என்ன என்று கேட்க வைத்து விட்டது பார்த்தீர்களா, அதுபோலவே படமும் அனைவரையும் கவரும் என்றார் ஷக்தி.

என்னமோ கண்ணு, ஒண்ணுமே புரியலை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil