»   »  ஸ்ஸப்பா... என்னா வெயில்... நிறுத்துங்க சார் ஷூட்டிங்கை!

ஸ்ஸப்பா... என்னா வெயில்... நிறுத்துங்க சார் ஷூட்டிங்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆந்திராவில் வெயில் தாக்கம் தாள முடியாததால் சில தினங்களுக்கு முன்புதான் பாகுபலி 2 படப்பிடிப்பை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி.

இப்போது தமிழ்நாட்டிலும் அதே நிலைதான். 100 டிகிரியைத் தாண்டி வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. டிசம்பரில் மழையைச் சபித்துக் கொண்டிருந்த வாய்கள், மழையே வா வா என ஜெபிக்க ஆரம்பித்துவிட்டன.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்புகள் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட கலைஞர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காஷ்மீருக்கு மாறிய இருமுகன்

காஷ்மீருக்கு மாறிய இருமுகன்

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிக்கும் ‘இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே கொளுத்தும் வெயிலில் நடந்து வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு இந்தியாவின் சுவிட்சர்லாந்தான காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளது.ட

கத்தி சண்டை

கத்தி சண்டை

இன்று நடக்கவிருந்த விஷாலின் கத்தி சண்டை படத்தின் ஷூட்டிங் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் கடும் வெயில் காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டன.

மற்ற படங்களும் மாறுமா

மற்ற படங்களும் மாறுமா

கார்த்தி நடிக்கும் காஷ்மோரா, சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, சுந்தர்.சி. நடிக்கும் ‘முத்தின கத்திரிக்கா' போன்ற படங்களின் படப்பிடிப்புகள் சென்னையில் கொளுத்தும் வெயிலில் நடக்கின்றன. இவற்றையும் தற்காலிகமாக சில தினங்களுக்கு நிறுத்தி வைக்கப் போகிறார்களாம்.

கருகும் கலைஞர்கள்

கருகும் கலைஞர்கள்

முன்னணி நடிகர்-நடிகைகள் தங்கள் காட்சிகளில் நடித்து முடித்ததும் கேரவனுக்குள் சென்று ஏசி காற்றை அனுபவிக்கின்றனர். ஆனால் மற்ற கலைஞர்கள் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளதாம்.

பொலிவியா செல்லும் 2.O

பொலிவியா செல்லும் 2.O

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 2.O படத்தின் காட்சிகள் கொளுத்தும் வெயிலில் டெல்லியில் நடந்தன. மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தும் திட்டமிருந்தது. ஆனால் இந்த வெயிலில் நடத்துவது சிரமம் என்பதால், அடுத்த மாதம் திட்டமிட்டிருந்த பொலிவியா ஷெட்யூலை இப்போதே முடித்துவிட முடிவு செய்துள்ளனர்.

English summary
Most of the shootings of Tamil movies including Rajinikanth's 2.O have been cancelled or postponed due to the scorching Chennai heat
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil