»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

நடுத்தர வர்க்க குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இயக்குநர் சேகர் இயக்கிய வெற்றிப்படங்களான ஒண்ணா இருக்கக்கத்துக்கணும், பொறந்த வீடு புகுந்த வீடு வரிசையில் அடுத்து வருவது வீட்டோடு மாப்பிள்ளை. திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிக்கிறது.

தன் குழந்தைகளை விட மருமகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் பிரச்னைகளும் அதனை நகைச்சுவையாக சமாளிக்கும் நளினமுமேபடத்தின் கதையாகும்.

படத்தின் கதை நகைச்சுவையாக இருப்பதற்காக நெப்போலியன் - ரோஜா ஜோடியுடன் சார்லி-கோவை சரளா, வையாபுரி-கல்பனா ஜோடிசேர்ந்துள்ளனர்.

இவர்கள் தவிர விஜயகுமார், தலைவாசல் விஜய், தியாகு சேர்ந்து நடித்துள்ள இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். மணிவண்ணன் எடிட்டிங், நடனம் லலிதாமணி, சிவசங்கர், சண்டைப் பயிற்சி ஜாகுவார் தங்கம். படத்தை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் துரைராஜ், பார்த்திபன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இதோ இன்னொரு சேகர்!

குறைந்த பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பவரான சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் தயாரித்துள்ள படம் குடும்பம் ஒரு கோயில்.

சமீபத்தில்தான் அவள் பாவம் என்ற பெயரில் ஒரு லோ பட்ஜெட் படத்தைத் தயாரித்து வெளியிட்டார் ராஜன். அதில் ராஜனின் மகன் பிரபுகாந்த்ஹீரோவாக நடித்திருந்தார். இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வருகிறார். அதாவது ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கிறார்.

முதல் படம்தான் குடும்பம் ஒரு கோவில். ராம்கி, சுரேஷ், பாபு கணேஷ், விந்தியா, ரித்திகா போன்றோர் நடிக்க சின்ன பட்ஜெட்டிற்குள் குடும்பத்தைநடத்துவதற்கு குடும்பத் தலைவர் படும் கஷ்டங்களைச் சொல்லியுள்ளார் இயக்குநர் பாபு கணேஷ். கதையை கே.ராஜனே எழுதியுள்ளார்.

நினைக்காத நாள் இல்லை

கே.ராஜனின் மற்றொரு படம் பார்த்திபன், ரகுமான்,தேவயானி மற்றும் காவேரி நடிக்கும் நினைக்காத நாள் இல்லை.

இரண்டு கதாநாயகர்கள் இருந்தாலும் கூட, இப்படத்தில் தயாரிப்பாளர் ராஜனே முக்கிய வேடமேற்று நடித்துள்ளார். இசையமைப்பாளர் தேவாவின்இசையமைப்பில் பிப்ரவரி மாதத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் ராஜா. கேமராவுக்கு ரகுநாத ரெட்டியும், சண்டைக்குராம்போ ராஜ்குமாரும் இருக்கிறார்கள்.

பிப்ரவரியில் படம் ரிலீஸ் என்கிறார்கள். 30 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டிருப்பதாக ராஜன் தெரிவித்துள்ளார்.

பி.கு.: அவள் பாவம் படத்தின் பெயர் பின்னர் செம்பருத்திப் பூவே என்று மாற்றப்பட்டது. மலையாள வாசம் வீசுவது போலத் தெரிந்ததால், பெயரைமாற்றி விட்டார்கள்.

Read more about: cinema, krajan, new movies, parthiban, vsekhar
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil