»   »  20 வயசு 200 இளசு!

20 வயசு 200 இளசு!

Subscribe to Oneindia Tamil

20 வயதைத் தாண்டாத 200 இளங் கன்னிகளை ஒரு சேர பார்த்தால் எப்படி இருக்கும். அதுவும் மண்டையை உருக்கும் கொளுத்தும் வெயிலில் இப்படி ஒரு இளம் கன்னியர் கூட்டம் சென்னைக்கு சமீபத்தில் விசிட் அடித்து வியர்க்க வைத்து விட்டுப் போயுள்ளது.

புதுப்பேட்டை பேஸ்த் அடித்து விட்டதால் கடுப்பான செல்வராகவன் அடுத்த படத்தை தமிழில் இயக்காமல் தெலுங்கில் இயக்கப் போய் விட்டார். அங்கு அவரது கைவண்ணத்தில் உருவாகி வரும் படம்தான் அடவரி மடலுகே அர்த்தம் வெருளே.

இந்தப் படம்தான் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் தனுஷ், நயனதாரா நடிப்பில் ரீமேக் ஆகிறது. தெலுங்குப் படமாக இருந்தாலும் கூட படப்பிடிப்பின் பாதிப் பகுதியை சென்னையில் வைத்துத்தான் சுட்டு வருகிறார் செல்வராகவன்.

சமீபத்தில் ஒரு பாட்டை பிரசாத் ஸ்டுடியோவில் வைத்து சுடச் சுட ஷூட் செய்தார் செல்வராகவன். காட்சி இளமையாக வர வேண்டும் என்பதற்காக 200 இளம் பெண்களை இறக்குமதி செய்திருந்தார் செல்வராகவன்.

அத்தனை பேரும் பல்வேறு வாகனங்களில் பத்திரமாக ஸ்டுடியோவுக்கு அழைத்து வரப்பட்டனர். 200 பேருமே 20 வயசைக் கூட தாண்டாத பிஞ்சுப் பெண்கள்.

கொஞ்சும் விழிகளுடன், மிஞ்சும் இளமையுடன், பஞ்சென வந்து சேர்ந்த அந்த அழகிகளை வைத்து அட்டகாசமாக பாட்டை படமாக்கினார் செல்வராகவன்.

ஒரு அழகியை வைத்தே ஓராயிரம் விருந்து படைப்பவர்கள் தெலுங்குத் திரையுலகினர். அப்படி இருக்கையில் 200 அழகிகள் என்றால் தெலுங்கு ரசிகர்களுக்கு பல இடங்களிலும் மச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்காக தமிழ் ரசிகர்கள் இனா வானாக்கள் என்று முடிவு கட்டி விடத் தேவையில்லை. இந்த அழகிகளை வைத்து தமிழிலும் தந்தனக்கா ரேஞ்சில் பாட்டை வைத்துள்ளார்களாம்.

அட்ரா, அட்ரா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil