»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மிக வேகமாகத் தயாராகிக் கொண்டுள்ளது சேரன் இயக்கி வரும் ஆட்டோகிராப். பொங்கலுக்கு படத்தைவெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

படத்தின் பாடல் கேசட் வெளியாகிவிட்டது. பரத்வாஜ் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.

பாண்டவர் பூமியின் சுமாரான வெற்றிக்குப் பின் சேரன் முழுக்க முழுக்க நம்பி களமிறங்கியிருக்கும் படம் இது.சொல்ல மறந்த கதையில் தங்கர்பச்சானால் ஹீரோவாக்கப்பட்ட சேரன், இப்போது தனது இயக்கத்தில் தானேஹீரோவாக நடிக்கிறார்.

கதையில் இவருக்கு நான்கு ஹீரோயின்கள். ஆந்திராவைச் சேர்ந்த ஸ்னேகா, அதே ஊரைச் சேர்ந்த கனிகா.மலையாளத்தைச் சேர்ந்த கோபிகா, ரீஜா என நான்கு பேர்.

கதை கடந்த 45 ஆண்டுகளில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளதால், எம்.ஜி.ஆர். போடும் பலூன் பேகிபேண்ட்டில் ஆரம்பித்து, பின்னர் ரஜினி-கமல் போட்ட ரோட்டை கூட்டிப் பெருக்கும் பெல் பாட்டம், நாய் காதுசட்டைக் காலர் என காஸ்ட்யூம்கள் ரெடி பண்ணி சேரனுக்கு மாட்டியிருக்கிறார்கள்.

அதே போல ஹீரோயின்களுக்கு மண்டையை விட பெரிதாக இருக்கும் சரோஜாதேவி கொண்டைபோட்டுவிட்டிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் இருந்து கதை இன்றைய சூழலுக்கு நகர, நகர உடைகளும் மேக்-அப்பும் மாறிக் கொண்டேவருமாம்.

கேரளாவில் ஆரம்பித்து சென்னை, திண்டுக்கல், பழனி, திருவண்ணாமலை மற்றும் குலு மாணிலியில் சூட்டிங்நடந்து முடித்திருக்கிறது.

ஒரு பாடல் காட்சிக்கு பார்வையற்றோர் குழு ஒன்றை இசையமைக்க வைத்துள்ளார் சேரன். படத்துக்கு நான்குஒளிப்பதிவாளர்களையும் வைத்துக் கொண்டுள்ளார் சேரன்.

இந்தப் படத்தை சேரனை விட மிகவும் எதிர்பார்த்திருப்பது ஸ்னேகாவும் கனிகாவும் தான். ஸ்னேகாவுக்கு இந்தப்படத்தைத் தவிர இன்னொரு படம் மட்டுமே கையில் உள்ளது. கனிகா பைவ் ஸ்டார் என்ற படத்தில்அறிமுகமானார். அவர் கையில் ஒரு படமும் இல்லை.

ஆனால், படத்தில் கோபிகாவுக்கே மிகுந்த முக்கியத்துவம் தரப்படுவதாக சொல்கிறார்கள். படம் வெளியானால்ஸ்னேகா, கனிகாவை விட கோபிகாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்கிறார்கள்.

பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil