»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

மும்தாஜ் பாணியில் முழுக்க முழுக்க கவர்ச்சியை களமாகக் கொண்டு தமிழ்ப் படம் தயாரிக்க முடிவு செய்து ஆரம்ப கட்டப்பணிகளில் இறங்கியுள்ளாராம், ஆடைக் குறைப்பில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திய ஷகீலா.

கோலிவுட்டில் அறிமுகமாகி கவுண்டமணிக்கு ஜோடியாக சிற் சில படங்களில் நடித்து எதுவும் தேறாததால் மல்லுவுட்டில்(மலையாளப் படவுலகில்) நுழைந்து மோகன்லால்களையும் மம்மூட்டிகளையும் ஓரம் கட்டச் செய்தவர் ஷகீலா.

இப்போது மலையாளப் படவுலகில் இவரை வைத்துப் படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுவிட்டதால் தமிழ்த் திரையுலகை நம்பிமீண்டும் வந்தார்.

தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள்கிடைக்கும் என்று நம்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி தான் மிஞ்சயது. சின்னச் சின்னவேடங்கள் மட்டுமே கிடைத்தன.

பார்த்தார், மும்தாஜ் பாணியில் சொந்தமாக படம் தயாரித்து, அதில் தனது தாராள கவர்ச்சியை அள்ளி வீச முடிவு செய்து அதற்கானவேலைகளில் இறங்கி விட்டார்.

இருப்பினும், மலையாள பலான பட பாணியில் இது இருக்காதாம். கதையும் கவர்ச்சியும் ஒன்று சேர்ந்து புரளுமாம். அது சரி,ஷகீலா "நடித்தால்" நம் ஆட்கள் பார்க்காமலா இருக்கப் போகிறார்கள்.

Please Wait while comments are loading...