»   »  ரஜினிக்காக உக்ரைனையே சென்னையில் உருவாக்கிய ஷங்கர்!

ரஜினிக்காக உக்ரைனையே சென்னையில் உருவாக்கிய ஷங்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக உக்ரைன் நாட்டு லொகேஷனையே சென்னையில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.


Shankar recreates Ukrain in Chennai

ரஜினி நடிக்கும் 2.0 படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடலை உக்ரைனில் படம்பிடிக்கத்தான் முதலில் முடிவு செய்திருந்தாராம்.


ஆனால் உக்ரைன் போக முடியாத சூழல். ரஜினியும் வெளிநாட்டுப் பயணத்தை விரும்பவில்லை. எனவே இங்கேயே செட் போட்டு எடுத்துவிடலாம் என முடிவு செய்தார்களாம்.


உக்ரைன் நாட்டில் தான் படமாக்க விரும்பிய லொகேஷனை அப்படியே சென்னையில் உருவாக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார். இங்கேயே அந்தப் பாடலை படமாக்கியும்விட்டார். துணைக்கு கிராஃபிக்ஸ் டீமே இருந்ததால் எதிர்ப்பார்த்ததை விட திருப்தியாக வந்துவிட்டதாம். செலவு... அதைப் பற்றி கவலையேபடவில்லையாம் தயாரிப்பு நிறுவனமான லைகா.

English summary
Sources say that scenic locations of Ukraine will be recreated in VFX for a melodious song in Rajinikanth’s magnum opus ‘2.0’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil