»   »  ‘ஐ’ படத்தோட கிளைமாக்ஸ் ஷூட்டிங் கீழ்ப்பாக்கம் பக்கத்துல நடக்கப்போகுதாமே...

‘ஐ’ படத்தோட கிளைமாக்ஸ் ஷூட்டிங் கீழ்ப்பாக்கம் பக்கத்துல நடக்கப்போகுதாமே...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படமான 'ஐ' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே, முக்கால்வாசி முடிந்து விட்டது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் படமாக்கப் படவேண்டி இருக்கிறதாம். அதனை சென்னையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெற்றிநடை போட்ட படம் 'அந்நியன்'. தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது இந்த வெற்றிக்கூட்டணி. படத்தின் நாயகி எமி ஜாக்சன்.

ஷங்கர் படமென்றாலே பிரமாண்டம் இருக்கும். அது கதையின் ஓட்டத்திலாகட்டும், காட்சியிலுமாகட்டும் பிரதிபலிக்கும். இந்நிலையில் தனது பிளாக்கில் ஐ படத்தின் படப்பிடிப்பு பற்றி லேட்டஸ்ட்டாக கொசுறு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷங்கர். அதில்....

கிளைமாக்ஸ் தான் பாக்கியாம்...

கிளைமாக்ஸ் தான் பாக்கியாம்...

ஐ படத்தின் படப்பிடிப்புகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப் பட இருக்கிறது.

சென்னையில் கிளைமாக்ஸ்...

சென்னையில் கிளைமாக்ஸ்...

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அருகில் படமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

கடின உடற்பயிற்சியில் விக்ரம்...

கடின உடற்பயிற்சியில் விக்ரம்...

இந்த இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க எப்படியும் ஒருமாத காலம் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏனென்றால் கிளைமாக்ஸ் காட்சிக்குத் தேவையான உடற்கட்டைப் பெற விக்ரம் கடின உடற்பயிற்சியில் உள்ளார்.

காத்திருத்தல் பயனுள்ளது...

காத்திருத்தல் பயனுள்ளது...

ஏற்கனவே பட வேலைகள் ஆரம்பிக்கப் பட்டு வெகு நாட்கள் ஆகிறது. இப்போது விக்ரமிற்காக படவேலைகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்தக் காத்திருப்பின் பலன் அர்த்தமுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

விக்ரமின் தலைமறைவு வாழ்க்கை...

விக்ரமின் தலைமறைவு வாழ்க்கை...

ஐ படத்திற்காக விக்ரம் கடந்த சில காலமாக ஜிம்மிற்கும் வீட்டிற்கும் நடையாய் நடந்து வருகிறார் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதனால் தான் சமீபத்தில் எந்த விழாவிலும் விக்ரமைப் பார்க்க முடிவதில்லை.

English summary
Director Shankar has updated in his blog that he's completed shooting 75 per cent of his Ai and will be starting the next schedule soon. Now, the latest is that the director is shooting the climax sequence at a hospital in near Kilpauk in Chennai.
Please Wait while comments are loading...