»   »  கொந்தளிப்பில் மாட்டிய ஷெரீன்

கொந்தளிப்பில் மாட்டிய ஷெரீன்

Subscribe to Oneindia Tamil

நீண்ட இடைவெளுக்குப் பின் ஒரு வழியாக தமிழில் மீண்டும் கால் பதிக்க வந்திருக்கும் ஷெரீன் மற்றும் படக் குழுவினர் தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பின்போது கடலில் மூழ்க இருந்து தப்பி வந்துள்ளார்.

துள்ளுவதோ இளமை மூலம் தனது இளமையை துள்ள வைத்துக் காட்டிய ஷெரீன் அப்படியே காணாமல் போய், தெலுங்கு, தாய் மொழி கன்னடத்தில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு திரும்பி வந்துள்ளார்கள்.

பீமா படத்தில் விக்ரமுடன் ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு வருகிறார். அத்தோடு நந்தாவுடன் ஒரு படத்தில் ஹீரோயினாக புக் ஆகியிருக்கிறார். படத்தின் பெயர் உற்சாகம்.

விட்ட இடத்தைப் பிடிக்க இதில் உற்சாகத்தோடு தனது கிளாமரைக் காட்டி அசத்திக் கொண்டிருக்கிறார் ஷெரீன். இந்தப் படத்தின் பாடல் காட்சி தாய்லாந்தில் நடந்தது.

பாங்காங்க்கிலிருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள புக்கெட் தீவில் சூட்டிங் நடந்தது. இதற்கு பல மணி நேர படகில் பயணம் செய்ய வேண்டும்.

சூட்டிங் முடிந்து ஷெரீன், நந்தா, இயக்குநர் ரவிசந்திரன் உள்ளிட்ட யூனிட்டார் 20 பேர் ஒரு படகில் வந்துக் கொண்டிருந்தபோது திடீரென கடலில் கொந்தளிப்பு அதிகரித்தது. இதனால் படகை தொடர்ந்து இயக்க முடியாமல் படகோட்டிகள் திணற, படகு அங்குமிங்கும் ஓடியதில் படகில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழ ஆரம்பித்தனராம்.

பயத்தில் ஷெரீன் அலறி அழுவிட்டாராம். அவருக்கு லைப் ஜாக்கெட் அணிவிக்கப்பட்டதாம்.

இதையடுத்து ஒரு வழியாக குழுவினர் பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

இன்னும் அந்த பயத்தில் இருந்து மீளாமலேயே தொடர்ந்து சூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறாராம் ஷெரீன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil