»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால், எந்த அளவுக்கு அங்கு அனல் பறக்குமோ, அதை விட கூடுதலானவெப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ஷெரீனும், காயத்ரி ரகுராமும்.

இரு நடமாடும் தாஜ்மஹால்களும் சேர்ந்து விசில் படத்தில் நடித்து வருவது தெரியும்தானே?

அந்தப் படத்தில் டான்ஸ் மாஸ்டர்களாக காயத்ரி ரகுராமின் சித்திகளான கலாவும், பிருந்தாவும் இருக்கிறார்கள்.இதனால் காயத்ரி ரகுராக்குப் பெயர் வருவது மாதிரியான ஷாட்கள் அதிகம் வைக்கப்பட்டுள்ளதாம்.

அதே சமயத்தில், ஷெரீனுக்கு உப்புச் சப்பில்லாத மூவ்மென்ட்களைக் கொடுத்துள்ளார்களாம் இந்த சித்திகள்.

இதனால் கடுப்பாகிப் போன ஷெரீன் டைரக்டர்களான ஜேடி- ஜெர்ரியிடம் புகார் சொன்னாராம். காயத்ரியைவிடஷெரீனுக்கு அதிக பாப்புலாரிட்டி இருப்பதால் ஷெரீனுக்கும் முக்கியத்துவம் தருமாறு அவர்களும் டான்ஸ்மாஸ்டர்களிடம் கூறியுள்ளனர்.

ஆனாலும், கலாவும் பிருந்தாவும் தன்னை தொடர்ந்து ஒதுக்க முயல்வதாக ஷெரீன் கூறி வருகிறார்.

இந்தப் பிரச்சனையால் காயத்ரி ரகுராமிடம் சூட்டிங் ஸ்பாட்டில் பேசுவதையே நிறுத்துக் கொண்டுவிட்டார்ஷெரீன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த்துக் கொள்வது கூட இல்லையாம்.

படப் பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் பாடல் காட்சிகள் தான் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் தான்இந்தச் சண்டை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil