twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    48 ஆண்டுகளுக்குப் பிறகு பட்சிராஜா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு

    By Shankar
    |

    Siruvani
    கோவை: 48 நெடிய ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் உள்ள பட்சிராஜா ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது.

    பட்சிராஜா ஸ்டுடியோ மிக பழமையானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், ஜெமினிகணேசன் உள்ளிட்ட பழைய கதாநாயகர்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளது.

    பத்மினி சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா, உள்ளிட்ட பழைய நடிகைகளும் இந்த ஸ்டூடியோவில் தங்கி நடித்துள்ளனர்.

    எம்.ஜி.ஆரின் மலைக் கள்ளன் படத்தின் பெரும் பகுதி காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டன. சென்னையில் புதிய ஸ்டூடியோக்கள் உருவானதால் பட்சிராஜா ஸ்டூடியோ களை இழந்தது. அங்கு படப்பிடிப்புகள் நடக்க வில்லை.

    48 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவாணி என்ற படத்தின் படப்பிடிப்பு பட்சி ராஜா ஸ்டூடியோவில் இன்று காலை நடந்தது.

    இந்த படத்தின் காட்சிகள் சிறுவாணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. கோவை எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கைவண்ணத்தில் உருவாகும் காதல் கதை இது.

    படப்பிடிப்பு குறித்து இசையமைப்பாளர் தேவா கூறும்போது, பட்சிராஜா ஸ்டூடியோவில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் காந்திபுரம் என்ற பாடல் கோவை நகரை மையமாக கொண்டதாகும், என்றார்.

    English summary
    The shooting of a new film Siruvani has held at Coimbature Pakshiraja studio's today after 48 long years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X