»   »  சூட்டை கிளப்பும் ஷிரியா

சூட்டை கிளப்பும் ஷிரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மழை படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் தெலுங்கு சினிமாவைக் கலக்கி வரும் ஷிரியா.

தெலுங்கில் மூத்த குடிமகன்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்ட ஷிரியா தமிழில்மழையில் நனைவது ஜெயம் ரவி உடன்.

படத்திலும் ஹீரோயினாகவே நடிக்கிறார் ஷிரியா. இவருக்கு முன்னணி ஹீரோயின் கேரக்டர். ரவிக்கு துண்டு, துக்கடா வேடங்களில்நடிக்கும் ஒரு சின்ன நடிகர் கேரக்டராம். இந்த இருவருக்கும் காதல் வந்தால்... இது தான் மழை படத்தின் கதை.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமீபத்தில் ஒரு முத்தக் காட்சி. மழையில் நனைந்தபடியேஜெயம் ரவியுடன் முத்தத்தால் யுத்தம் செய்யும் காட்சி.

அதில் ரவிக்கு முத்தம் குறித்து பிஎச்டி கிளாசே எடுத்துவிட்டாராம் ஷிரியா. சூட்டிங் ஸ்பாட்டில் நுழைந்து ஒட்டு மொத்த யூனிட்டுக்கும் முன்ஷிரியாவுக்கு ரவி இச் கொடுக்கும் காட்சி அது.

ஸ்பாட்டுக்குள் புயல் மாதிரி வந்த ரவிக்கு ஷிரியாவை நெருங்கியதும் முத்தம் வரவில்லை. வெறும் சத்தம் தான் வந்துள்ளது. இப்படியே 3டேக்குகள் ஓடிவிட, அடுத்த டேக்கில் முழு வீரத்தையும் காட்டியிருக்கிறார் ரவி.


ஷிரியாவை அப்படியே அணைத்து லிப்பில் ஒரு கிச்சாங் கொடுக்க ஷிரியாவும் சும்மா இல்லையாம். நன்றாகவே உதட்டை நனைத்துக்கொண்டாராம். இதைப் பார்த்த உண்மையான சூட்டிங் ஸ்பாட் ஆசாமிகள் சூடாகிப் போனது தனிக் கதை.

இந்த லிப் கிஸ்சுக்கு அடுத்த சீன் என்னவாக இருக்கும்... கரெக்ட் அதே தான். ஒரு ட்ரீம் ஸாங்கை சேர்த்திருக்கிறார்கள்.

இஸ்தான்புல் ராஜகுமாரி..

முத்தத்தில் சூடு கிளப்பு என்ற வைரமுத்துவின் பட்டையைக் கிளப்பும் வரிகளுக்கு நன்றாகவே மூவ்மெண்ட்ஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்ஷிரியா.

இந்தப் படத்தை இயக்குவது ராஜ்குமார்.

இப்படி தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்துள்ள ஷிரியா அப்படியே மம்மூட்டியுடன் மலையாளத்தில் "பிளாக் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதில் இவருக்கு தமிழ் பேசும் பெண் வேடமாம். இதில் வேடிக்கை என்னவென்றால் ஷிரியாவுக்கு தமிழே தெரியாதுஎன்பது தான்.

மும்மொழிகளிலும் ஓடியாடி நடித்துக் கொண்டிருக்கும் ஷிரியாவுக்கும் ஹைதராபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபரின் மகனுக்கும்இதுவாம். அவரது அன்புப் பிடியில் இருக்கும் ஷிரியா விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil