»   »  ஷ்ரியாவின் முரண்டு

ஷ்ரியாவின் முரண்டு

Subscribe to Oneindia Tamil
என்னவாச்சோ தெரியவில்லை. மழை படத்தில் நன்றாகத் தான் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வந்தார் ஷ்ரியா

பெரும்பாலும் மழையில் நனைய வைத்தே ஷ்ரியாவைப் படம் பிடித்து வந்தார்கள். சில காட்சிகளுக்காக நாள் முழுக்க தண்ணீரில் நனைய வேண்டி வந்ததால், சுடு நீரை ஸ்ப்ரெ செய்து கொண்டிருந்தது யூனிட்.

மழையில் நனைந்தபடியே ஹீரோ ரவிக்கு மெளத் கிஸ் தர வேண்டிய சீனில் ரவியே திணறும் வகையில் முத்தத்தில் பாடமே எடுத்தார் ஷ்ரியா.

வஞ்சமோ பஞ்சமோ இல்லாமல் ஷ்ரியா கவர்ச்சி காட்டி வருவதாக எல்லா பத்திரிக்கைகளும் கொட்டை எழுத்துக்களில் நியூஸ் போட்டு வந்த நிலையில் ஷ்ரியாவிடம் திடீர் மாற்றம்.

படத்தில் ஏகத்துக்கும் ஹாட் விஷயங்களைத் திணித்து தன்னை டார்ச்சர் செய்ததாலோ என்னவோ சில, பல காட்சிகளில் ஷ்ரியா முரண்டு பிடிக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. காட்சிப் படி ஹீரோ ரவிக்கு அவர் பச்செக்கென உதட்டில் கிஸ் அடிக்க வேண்டும். (மீண்டும் லிப்-டு-லிப் சீன்)

அப்படியே முத்தமிட்டபடி அவர் முகம் முழுவதும் தனது கன்னத்தால் தடவிக் கொடுக்க வேண்டும் (என்னே ஒரு காட்சி...) ரவி ரெடியாகி விட்டார். ஆனால் ஷ்ரியாதான் முடியாது என்று கூறி விட்டார்.

அதிர்ந்து போன இயக்குனரும், ரவியும் ஷ்ரியாவை சமாதானப்படுத்தி, இதில் ஒன்றும் ஆபாசம் இல்லையே என்று விளக்கினார்களாம்.

ஆனால், நான் கவர்ச்சியான காட்சியில் நடிக்கத் தயார், ஆனால் இவ்வளவு குளோசப் காட்சியில், முத்தக் காட்சியில் மீண்டும் நடிக்க மாட்டேன், ஸாரி என்று சொல்லி விட்டாராம்.

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் ஷ்ரியா படியாததால், வேறு வழியின்றி உதட்டுக்குப் பதில் கன்னத்தில் மட்டும் கிஸ் அடித்தால் போதும் என காட்சி மாற்றப்பட்டதாம். அதேபோல கன்னத் தடவல் காட்சியும் கட் செய்யப்பட்டுவிட்டதாம்.

ஷ்ரியா மறுத்ததற்கு என்ன காரணம். ஒருவேளை ரவி பல்லு வெளக்காம வந்திருப்பாரோ என்று கண்டமேனிக்கு சந்தேகப்படாதீர்கள்.

படத்தில் அளவுக்கு மீறி தன்னை யூஸ் செய்வதாக ஷ்ரியா நினைப்பதாக சொல்கிறார்கள். தெலுங்கில் என்றால் ஓகே. தமிழில் இப்படி நடித்தால் ரொம்ப நாள் காலம் தள்ள முடியாது என்பதால் தான் ஷ்ரியா ஓவராக நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள்.

மேலும் ஷ்ரியாவின் அன்புக்குரியவரான ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவரின் மகனும், அவரை அடக்கி வாசிக்கச் சொன்னதாயும் ஒரு பேச்சு இருக்கிறது.

தொடர்ந்து ஷ்ரியா முரண்டு பிடித்தால், படத்தில் குஜாலைக் கூட்ட ஏதாவது ஒரு மும்பை குஜிலியை கதைக்குள நுழைத்து வேலை வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தப் படத்தைத் தயாரிப்பது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் என்பது உங்களுக்குத் தெரிந்தது தானே. எஸ்பிபியின் மிக நெருங்கிய நண்பரான வைரமுத்து தான் பாடல்கள் எழுதி இருக்கிறார்.படத்தில் ஷ்ரியா மழையில் குதித்துப் பாடும் சீனுக்கு அவர் எழுதியுள்ள பாடலின் சில வரிகள்:

சின்ன மேகமே, சின்ன மேகமே...

சேத்து வச்ச காசை வீசு

விண்ணொடு மேளச் சத்தம் என்ன..

மண்ணோடு சின்னத் தூறல் என்ன..

முத்து மழையே, முத்து மழையே... மூக்கு மேலே மூக்குத்தியாகு

உச்சி விழுந்து நெற்றியிலாடி, நெற்றி கடந்து, நீள் விழி ஓடி,

செண்பக மார்பில் சடுகுடுபாடி

அணுவணுவெங்கும் கிளுகிளு செய்தாய்...

விழியில் விழுந்து உயிரில் கலந்து பாடலின் பரிணாம வளர்ச்சியா இது, வைரமுத்து சார்?

Read more about: actress, cinema, ramya, shriya, trisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil