»   »  'சபாஷ் நாயுடு' படத்தில் ‘செவாலியே’ கமலின் ‘ஹார்ட் டச்சிங்’ தவறு.. ரகசியம் போட்டுடைத்த மகள் ஸ்ருதி

'சபாஷ் நாயுடு' படத்தில் ‘செவாலியே’ கமலின் ‘ஹார்ட் டச்சிங்’ தவறு.. ரகசியம் போட்டுடைத்த மகள் ஸ்ருதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சபாஷ் நாயுடு படத்தில் முதன்முறையாக தனது சொந்தமகள் ஸ்ருதியுடன் சேர்ந்து நடித்து வருகிறார் நடிகர் கமல். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது கதாபாத்திரத்தின் பெயருக்கு பதிலாக ஸ்ருதி என அழைத்து விட்டாராம் கமல்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று தான். அந்தவகையில், சிறந்த நடிப்பாற்றலுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியேவிற்கு தேர்வாகியுள்ள நடிகர் கமல் தனது படப்பிடிப்பில் செய்த சுவாரஸ்யமான தவறு ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது.


Shruti Revealed about Sabash Naidu and Kamal Haasan

கமல் இயக்கி நடித்து வரும் புதிய படம் சபாஷ் நாயுடு. இப்படத்தில் முதன்முறையாக அவரது மகள் ஸ்ருதியும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். படத்திலும் இருவரும் அப்பா, மகளாகவே நடிக்கின்றனர்.


இந்நிலையில், ஒரு காட்சியில் ஸ்ருதியை கமல் பேர் சொல்லி அழைப்பது போன்று படமாக்கப்பட்டதாம். அப்போது கமல், ஸ்ருதியின் கேரக்டர் பெயரைச் சொல்லி அழைப்பதற்குப் பதில், அவரின் நிஜப் பெயரைச் சொல்லி கூப்பிட்டு விட்டாராம்.


உலக நாயகன் எனப் புகழப்படும் எவ்வளவு பெரிய நடிகர் அவர், அவரே இப்படி சொல்லிட்டார் என்பது செம ஹார்ட் டச்சிங் மொமண்ட் ஆக இருந்ததாக இந்த சம்பவம் குறித்து ஸ்ருதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


ஸ்ருதி தற்போது 'சிங்கம் 3', பிரேமம் தெலுங்கு, சபாஷ் நாயுடு' போன்ற படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Shruti has revealed some interesting incidents with her father in Sabash naidu shooting spot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil