»   »  சைலன்ட் சிம்பு

சைலன்ட் சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்பு வர வர ரொம்ப நல்ல பிள்ளையாகி வருகிறாராம். எல்லாம் காதல் ஏற்பட்ட மோதல்களும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும்தான் காரணம் என்கிறார்கள்.

பொடி மட்டை வயதிலிருந்தே நடித்து வருபவர் சிம்பு. வளர்ந்து வாலிபனாகிய பின்னர் படு வேகமாக ஹீரோவாக உயர்ந்து, திறமையான இயக்குநராகவும் மாறி விட்டார் சிம்பு.

வல்லவன் படத்திற்குப் பிறகு சிம்புவின் ரேஞ்சே வேறு மாதிரியாகி இருக்கிறது. பெர்சனல் சைடிலும் சிம்புவிடம் நிறைய மாற்றம்.

முன்பெல்லாம் சிம்பு பட ஷூட்டிங் என்றாலே அவரது கலாய்ப்புகளுக்கும், கலகலப்புகளுக்கும், சீண்டல்களுக்கும் பஞ்சமே இருக்காது.

ஆனால் நயனதாரா மேட்டரில் சிக்கி மீண்ட பின்னர் சிம்புவிடம் நிறைய மாற்றம் தெரிகிறதாம். படப்பிடிப்பு தளங்களில் படு அமைதியாக காணப்படுகிறாராம் சிம்பு.

தேவையில்லாமல் ஹீரோயின்களிடம் பேசுவது, கலாய்ப்பது போன்றவற்றை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டாராம் சிம்பு. செட்டுக்கு முதல் முறையாக வரும்போது அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்கிறார். அத்தோடு சரி, பேக்கப் ஆகி வீடு திரும்பும் வரை தான் உண்டு, தன் வேலையுண்டு என்று மட்டுமே இருக்கிறாராம்.

காளை படப்பிடிப்பின்போது சைலன்ட்டான சிம்புவைப் பார்க்க முடிந்தது. ஹீரோயின் வேதிகாவிடம் ஷாட்டின்போது மட்டுமே ஜாலியாக பேசுகிறார். ஷாட் முடிந்தவுடன் கம்மென்று ஆகி விடுகிறார்.

தேனியில் முகாமிட்டுள்ள காளை டீம், படு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஷாட்டையும் திட்டமிட்டு சுட்டு வருகிறாராம் இயக்குநர் தருண் கோபி. சிம்பு சிறப்பாக ஒத்துழைப்பதாகவும், இதுவரை ஒரு பிரச்சினை கூட எழவில்லை என்றும் காளை யூனிட்டிலிருந்து செய்தி கசிந்துள்ளது.

காளையை மிகப் பெரிய வெற்றிப் படமாக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறாராம் சிம்பு. வல்லவனுக்குப் பிறகு நடந்த கசப்பான அனுபவங்களிலிருந்து மீள காளையின் வெற்றி அவசியம் என்று கடுமையாக உழைக்கிறாராம் சிம்பு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil