»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவின் மன்மதன் படத்தில் மும்பை கவர்ச்சிப் புயல் மந்திரா பேடி நடிக்கிறார்.

சிலம்பரசனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மன்மதன் படத்தில் சிம்புவுக்கு பிளேபாய் கேரக்டராம்.ஏகப்பட்ட அழகிகளுடன் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார் சிம்பு.

ஜோதிகா சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தற்போது மந்திரா பேடியும் நடிக்கவுள்ளார். உலகப் கோப்பைகிரிக்கெட் நடந்தபோது, காம்பியரிங் பண்ணுகிறேன் பேர்வழி என்று அரைகுரை ஆடையுடன் தோன்றி, ரசிகர்களை குண்டக்கமண்டக்க ஜொள்ளு விட வைத்தவர் மந்திரா பேடி.

இவரை சிம்பு முதன் முறையாக தமிழுக்கு அழைத்து வருகிறார். மாடலிங், காம்பியரிங், பாலிவுட் என படு பிசியாக இருக்கும்மந்த்தரா தென்னிந்தியப் படங்களில் நடிக்க மறுத்தவர். ஆனாலும் சிம்பு மும்பை சென்று, மந்த்ராவைச் சந்தித்து கதைசொல்லியிருக்கிறார்.

கதையைக் கேட்டதும் மந்த்ரா பேடி ரொம்பவும் இம்ப்ரஸ் ஆகி விட்டார். இந்த சின்ன வயதில் இவ்வளது திறமையா என்றுசிம்புவை பாராட்டியதோடு உடனே கால்ஷீட்டும் கொடுத்து விட்டார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறாராம்மந்த்ரா பேடி. மனநல டாக்டர் வேடமாம்.

இதற்காக சென்னை வந்திருந்த மந்திரா பேடி, சிம்புவுடன் படுநெருக்கமாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.கவர்ச்சியில் எப்போதும் குறை வைக்காத மந்த்ரா பேடி ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்பது வாசகர்களுக்கு ஒரு துயரமானசெய்தி.

சின்ன வயதில் இருந்தும் நடித்து வந்தாலும் இன்னும் பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு படம் சிம்புவுக்கு இதுவரைஅமையவில்லை. அண்மையில் வெளியான குத்து படமும் சுமாராகவே போனது.

இப்போது தானே சொந்தமாக கதை, வசனம், திரைக்கதை எழுதி இந்தப் படத்தில் நடிக்கிறார். படம் ஓடியே ஆக வேண்டும்என்பதற்காக கவர்ச்சி அதிகம் இருக்கும்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மந்த்ராவை பிடித்ததும் அதற்காகத்தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil