»   »  அச்சம் என்பது மடமையடா: படப்பிடிப்பில் சிம்புவுக்கு காயம், ரசிகர்கள் அதிர்ச்சி

அச்சம் என்பது மடமையடா: படப்பிடிப்பில் சிம்புவுக்கு காயம், ரசிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பில் நடிகர் சிம்புவுக்கு அடிபட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைத் தொடர்ந்து 2 வது முறையாக சிம்பு, கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான், தாமரை ஆகியோர் மீண்டும் இணைந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.

சுமார் 6 வருடங்களுக்குப்பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Simbu Injured in Shooting Spot

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் தள்ளிப் போகாதே பாடல் ஆகியவை ரசியர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை படம் பிடிக்கும் போது சிம்புவிற்கு முகம் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த சண்டைக்காட்சியில் சிம்புவிற்கு அடிபட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் தற்போது பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிம்பு, மஞ்சிமா மோகன், ராணா நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு-நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இது நம்ம ஆளு திரைப்படம் அடுத்த மாதத்தில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Simbu Injured in Acham Enbathu Madamaiyada Shooting Spot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil