»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குத்து படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் திவ்யாஸ் பந்தனாஸ் (என்ன பேருப்பா இது!).

மும்பையைச் சேர்ந்த மாடலான இவர் போதும், போதும் என்கிற அளவுக்கு காட்டோ, காட்டு என கவர்ச்சிகாட்டுகிறாராம்.

தெலுங்கில் ஒரு ரவுண்ட் போய் முயன்று பார்த்துவிட்டு மும்பைக்கே போய்விட்ட இந்தக் கிளியைப் பற்றிக்கேள்விப்பட்ட சிம்பு மும்பைக்குப் பறந்து போய் நேரில் பார்த்து ஓ.கே. செய்து கூட்டி வந்தாராம். வந்தஇடத்திலும் சிம்புக்கு முழு ஒத்துழைப்பு தருகிறாராம்.

சிம்புவை இவருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட, சூட்டிங் ஸ்பாட்டில் படு தாராளம் காட்டுகிறார் என்கிறார்கள்.

இதனால் குத்து சூட்டிங்குக்கு மிக உற்சாகமாய் வந்து போய்க் கொண்டிருக்கிறாராம் சிம்பு.

இதையறிந்த இன்னொரு இளம் நாயகனும் தனது அடுத்த படத்துக்கு திவ்யாஸ் தான் வேண்டும் என அடம் பிடித்துஅட்வான்ஸை திணித்துவிட்டாராம். இப்போது திவ்யாஸ் காட்டில் மழை.


குத்து தவிர சிம்புவே திரைக்கதை அமைத்து நடித்து வரும் இன்னொரு படம் மன்மதன்.

இதில் ஜோதிகா இவருக்கு ஜோடியாக நடிப்பது தெரிந்த செய்தி தான். ஆனால், குத்து பட சூட்டிங்குக்கு வரும்போது சிம்புவிடம்இருக்கும் உற்சாகம் இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போதும் மட்டும் மிஸ்சிங் என்கிறார்கள்.

காரணம் ஜோதிகாவாம். சமீபத்தில் சூட்டிங்கில் 4 எழுத்து ஆங்கிலக் கெட்ட வார்த்தையைச் சொல்லி, அதைஜோதிகாவைப் பேசச் சொல்ல, மறுத்துவிட்டு கார் ஏறிப் பறந்துவிட்டாராம் ஜோ. அப்புறம் போய் சமாதானப்படுத்திகூப்பிட்டு வந்திருக்கிறார்கள்.

இந்தப் பட சூட்டிங்கில் சிம்புவின் ஆட்டம் ஓவராக இருப்பதால் சிடுமூஞ்சியுடன் தான் ஜோதிகாவும் சூட்டிங்ஸ்பாட்டுக்கு வருகிறார் என்கிறார்கள். இன்டஸ்ட்ரியில் தனக்குள்ள நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாதுஎன்பதற்காகவே தினமும் சூட்டிங்குக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறாராம் ஜோதிகா. இல்லாவிட்டால் எப்பவோவிலகியிருப்பாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil