மீண்டும் துவங்கிய வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங்... சிம்பு அப்டேட்!
சென்னை : நடிகர் சிம்பு மாறுபட்ட கோணத்தில் நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு.
இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.
கடந்த சில தினங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளதாக சிம்பு அப்டேட் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்புவின் ஈஸ்வரன், மாநாடு ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இந்நிலையில் அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாறுபட்ட கோணத்தில் சிம்புவை பார்க்க முடிகிறது.

மூன்றாவது முறையாக கூட்டணி
முன்னதாக இந்த கூட்டணி விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் இணைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

சிம்புவின் 47வது படம்
எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சிம்புவின் 47 வது படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

ஏஆர் ரஹ்மான் இசை
கவிஞர் தாமரை இந்த படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார். ஏஆர் ரகுமான் இசை அமைத்து வருகிறார். ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். திருச்செந்தூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

மீண்டும் துவங்கிய படப்பிடிப்பு
கடந்த சில தினங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கி உள்ளதாக நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கியுடன் தான் இருக்கும்படியான புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

விரைவில் டீசர் வெளியீடு
இந்தப் படத்தின் டீசர் அடுத்த வாரத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து ரிலீஸ் தேதியை அறிவிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சிம்புவின் மாநாடு படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. இந்நிலையில் அவரது வெந்து தணிந்தது காடு படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தில் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

வித்தியாசமான போஸ்டர்கள்
இந்த படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமான சிம்புவை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் அவரது படங்கள் நம்பிக்கை அளித்து வரும் நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் அவர் வித்தியாசமாக காணப்படுகிறார். கௌதம் மேனன் மற்றும் சிம்பு இணைந்து இருந்த முந்தைய இரண்டு படங்களில் காதல் மையமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படம் வித்தியாசமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











