»   »  சிம்புவின் வாக் அவுட்!

சிம்புவின் வாக் அவுட்!

Subscribe to Oneindia Tamil


விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் - சீசன்2 கேம் நிகழ்ச்சியிலிருந்து சிம்பு வாக் அவுட் செய்து விட்டார்.

Click here for more images

சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குபவர் சிம்பு. இந்த நிலையில், புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் சிம்பு.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் 2ம் பாகத்தில் பங்கேற்ற மூன்ற நடுவர்களில் ஒருவராக சிம்புவும் இருந்தார். மற்ற இருவர் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், நடிகை சங்கீதா.

படு விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தனது காளை மற்றும் கெட்டவன் படப்பிடிப்புகளுக்கு மத்தியிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கறேக நேரம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார் சிம்பு.

டாப் ஸ்டாரான சிம்பு நடுவராகப் பணியாற்றியதால் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் பாப்புலாரிட்டி கிடைத்தது. படு விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்த இந்த ஷோவில் ஒரு பரபரப்பான நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.

நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள ஜோடிகளில் ஒன்றான பிருத்விராஜ் (பப்லு), உமா ரியாஸ் ஆகியோரின் ஆட்டத்தைப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார் சிம்பு. இது பிருத்விராஜை அப்செட் ஆக்கி விட்டது. இதுகுறித்து அவர் சிம்புவிடம், ஏன் எனது டான்ஸ் பிடிக்கவில்லை என்று கேட்க, எனக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்காது என்றுதான் சொல்வேன் என பட்டென்று கூறியுள்ளார் சிம்பு.

இதையடுத்து அவருக்கும் பிருத்விராஜுக்கும் கடும் வாதம். இறுதியில் சிம்பு குரல் உடைந்து, கண்களில் கண்ணீர் கொப்புளிக்க, நான் மனசுக்குப் பட்டதைத்தான் சொல்வேன், அதற்காக சிம்புவை திமிர் பிடித்தவன் என்றெல்லாம் கூறுவதா, எனக்கு நடிக்கத் தெரியாதே என்று அழாத குறையாக பேசி அரங்கத்தையே இறுக்கமாக்கியுள்ளார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, அந்த நிகழ்ச்சியிலிருந்து வழக்கமாக ஒரு ஜோடியை வெளியேற்ற வேண்டும். ஆனால் சூடான நிகழ்ச்சி நடந்து விட்டதால் சிம்பு, தானே வெளியேறுவதாக கூறி விட்டு எழுந்து சென்று விட்டாராம்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஏற்கனவே பரபரப்பாக போய்க் கொண்டுள்ள ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி, சிம்புவின் இந்த சீரியஸ் வாக்அவுட்டால் மேலும் விறுவிறுப்பு கூடிப் போயுள்ளது.

Read more about: jodi no1, programme, simbu, vijay tv

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil