»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

கோவில் படத்தில் நடித்து வரும் சிலம்பரசனுக்கும் இயக்குனர் ஹரிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற சாமி படத்துக்குப் பிறகு ஹரி இயக்கும் படம் கோவில். இதையும் வெற்றிப்படமாக்க வேண்டும் என மிகக் கவனமாகவும், ஈடுபாட்டுடனும் எடுத்து வருகிறார் ஹரி.

ஆனால்,தம் படத்தினால் ஏற்பட்ட திடீர் போதையிலிருந்து இன்னும் தெளியாமல் இருக்கும் சிம்புவோ, அடிக்கடிஷூட்டிங்கிற்கு மட்டம் போடுவதும், லேட்டாக வந்து, சீக்கிரமாக போவதுமாக இருந்துள்ளார்.

மேலும் ரஜினியைப் போல சில விரல் வித்தைகளைக் காட்டி, இந்த சீன்கள் எல்லாம் படத்தில் இருக்கனும் என்றும்கூறினாராம். ஆனால், கதையிலோ, காட்சிகளிலோ தலையிடும் வேலையெல்லாம் வேண்டாம் என்று ஹரிகண்டிப்புடன் பதில் கூறிவிட்டாரம்.

இந்த விவகாரம் தயாரிப்பாளருக்கும் போனது. அவர் டி.ராஜேந்தரிடம் பேச, அவர் தனது மகனை கண்டித்தாராம்.

இதையடுத்து கொஞ்ச நாள் அமைதியாக இருந்து சிம்பு திடீரென சூட்டிங்குக்கு லேட்டாக வருவது, திடீரெனகாணாமல் போவது, சூட்டிங் ஸ்பாட்டுக்கே வராமல் இருப்பது என்று மீண்டும் ஹரிக்கு டார்ச்சர் கொடுக்கஆரம்பித்தாராம்.

இதைத் தொடர்ந்து ஒரு சூப்பர் டெக்னிக்கை கண்டுபிடித்தார் ஹரி. அச்சு அசலாக சிம்புவைப் போலவே இருக்கும்ஒரு ஆளைத் தேடிக் கண்டுபிடித்து தயார் செய்துவிட்டார்.

சமீபத்தில் சூட்டிங்குக்கு எல்லோருமே தயாராக நிற்க சிம்பு மட்டும் வரவில்லை. அவருக்காக படக் குழு நெடுநேரம் காத்திருந்தது. மிக அமைதியாக காத்திருந்த ஹரி, அப்படியே எழுந்தார். சிம்புக்குப் போட வேண்டியகாஸ்ட்யூமை தான் கண்டுபிடித்து அழைத்து வந்த டூப்புக்கு மாட்டினார். அவரை வைத்தே சிம்புவின் காட்சிகளைசுட்டுத் தள்ளினார்.

இது குறித்து சிம்புவுக்கு யாரோ காதில் ஓதிவிட, அவ்வளவு நேரம் ஸ்பாட்டுக்கே வராமல் இருந்த அவர் அடித்துப்பிடித்து ஓடி வந்திருக்கிறார்.

தனது உடையில் வேறு ஒருவர் வசனம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து டென்ஷனான சிம்பு, இயக்குனர்ஹரியிடம் போய் சவுண்ட் விட, அதை விட அதிக கோபத்துடன் ஹரியும் திருப்பிக் கத்தினாராம்.

தயாரிப்பாளரின் பணத்தை கரியாக்க நான் விரும்பவில்லை. நீங்கள் ஒழுங்காக சூட்டிங்குக்கு வராவிட்டால்,இனிமேல் இப்படித்தான் செய்வேன் என்று அதிரடியாகக் கூறிவிட்டாராம்.

மேலும் படக்குழுவினர் பயன்படுத்தும் வாக்கி-டாக்கியிலும் யாரையே திட்டுவதைப் போல சிம்புவைத்திட்டியிருக்கிறார் ஹரி. வாக்கி டாக்கி வைத்திருந்த லைட் பாய் முதல் கேமராமேன் வரை அனைவர் காதிலும் இதுவிழுந்தாம். இதனால் சிம்புவை அவர்கள் ஏளனமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

சிம்பு நடித்த அலை படம் பெரும் தோல்வி அடைந்துவிட்டதால், கோவில் படத்தைப் பொறுத்தவரை சிம்புவைவிட ஹரியையே அதிமாக சப்போர்ட் செய்கிறாராம் தயாரிப்பாளர்.

எல்லாமே தனக்கு எதிராக திரும்பிவிட்டதால், கடந்த சில நாட்களாக ஹரி என்ன சொன்னாலும் தலையாட்டஆரம்பித்துவிட்டாராம் சிம்பு. ஆனால், அவர் மீண்டும் எப்போது முருங்கை மரத்தில் தாவிக் குதிப்பார் என்றுதெரியவில்லை.

தனக்குப் போட்டியாக சிம்பு நினைக்கும் தனுஷின் திருடா திருடி வசூல் மழையை கொட்ட, சிம்பு- திரிஷா நடித்தஅலை சத்தமே இல்லாமல் தியேட்டர்களில் இருந்து பெட்டிகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil