»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

உதயா படத்தின் பாடல் காட்சிகளை முடித்துக் கொடுப்பதற்கு சிம்ரன் தனது கணவருடன் சென்னை வருகிறார்.

விஜய் - சிம்ரன் ஜோடியாக நடிக்கும் உதயா படத்தை பிரமிட் நடராஜன் கடந்த 5 வருடங்களாக எடுத்து வருகிறார்.பூஜை முடிந்து, படப்பிடிப்பிற்குப் போனவர்கள் கதை சரியில்லை என்று பாதியிலேயே திரும்பி விட்டனர். கதையைசரிசெய்து விட்டுப் பார்த்தபோது, விஜய்யும், சிம்ரனும் வேறு வேறு படங்களில் பிஸியாகி விட்டார்கள்.

ஒருவர் கால்ஷீட் கிடைக்கும்போது, மற்றொருவரின் கால்ஷீட் கிடைக்காமல் படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.இதற்கிடையே படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லண்டன் பக்கம் சென்றுவிட படம் மேலும்தாமதமானது.

ஒரு வழியாக படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் படமாக்கப்பட்ட நிலையில், சிம்ரன் தனது காதலர் தீபக்கைமணந்து கொண்டு மும்பை சென்றுவிட்டார். அதோடு இனி சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று ஒரு குண்டையும்தூக்கிப் போட்டார். சிம்ரனின் இந்த முடிவால், அவரது ரசிகர்களைவிட அதிகம் அதிர்ச்சியடைந்தது தயாரிப்பாளர்நடராஜன்தான்.

ஏனென்றால், விஜய் - சிம்ரன் ஜோடியாக நடித்துக் கொடுக்க வேண்டிய இரண்டு பாடல்கள் இன்னும்பாக்கியுள்ளது. இதனையடுத்து நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தை முடித்துக் கொடுக்குமாறு சிம்ரனுக்கு உத்தரவிட்டார். சிம்ரனும் தேனிலவு முடிந்ததும் நடித்துக்கொடுக்க ஒத்துக் கொண்டார்.

அதன்படி பிப்ரவரி 1ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சிம்ரன் தனது கணவர்தீபக்குடன் சென்னை வருகிறார்.

8 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் அவர், தி.நகர் ரெசிடென்ஸி டவர்ஹோட்டலில் தங்குகிறார். படப்பிடிப்பு முடிந்ததும், மீண்டும் மும்பை திரும்புகிறார் சிம்ரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil