»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

வீச்சரிவாள் கலாச்சாரத்தை வளர்க்கக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டசிலர் குரல் கொடுத்து வரும் வேளையில், அதே டைப்பிலான கதையம்சம் கொண்ட கோவில்பட்டிவீரலட்சுமிக்கும் சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள்.

சிம்ரன் நடித்துள்ள முதல் அதிரடிப் படம் கோவில்பட்டி வீரலட்சுமி. சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கும் சிம்ரன்,இந்தப் படத்தில் அரிவாளை எடுத்து பல பேரை சரக் சரக் என்று தலையை சீவுகிறாராம்.

மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில் அரிவாளும், ரத்தமும், சதையுமான காட்சிகள் ஏராளம்என்கின்றனர்.

கமல்ஹாசனின் சண்டியர் படத்தால் வீச்சரிவாள் கலாச்சாரம் பரப்பப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்கமலுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்த சிம்ரனின் படத்திற்கும் எதிர்ப்பு கிளம்புமோ என்ற அச்சத்தில்கோவில்பட்டி வீரலட்சுமி படத் தயாரிப்பாளர்கள் உள்ளனராம்.

Please Wait while comments are loading...