»   »  சிம்ரனுக்குப் பதில் "ஆட்டம் போட்ட ரகஸ்யா!

சிம்ரனுக்குப் பதில் "ஆட்டம் போட்ட ரகஸ்யா!

Subscribe to Oneindia Tamil

கர்ப்பத்தைக் காரணம் காட்டி கவர்ச்சியாக ஆட மறுத்ததால், "கிச்சா வயசு 16 படத்தில் சிம்ரனுக்குப் பதில் "சீனா தானாரகஸ்யாவை வைத்து இரண்டு குத்துப் பாட்டுக்களை சுட்டுள்ளார்களாம்.

கண்ணாலத்துக்குப் பிறகு சிம்ஸ் ஹீரோயினாக நடித்து வரும் படம் "கிச்சா வயசு 16. சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த சிம்ரன்,"கிச்சாவில் மட்டும் அதிக ஈடுபாட்டுடன் நடித்து வந்தார்.

இந்த நிலையில் "கிச்சா படப்பிடிப்பு பாதியில் நின்றது. சிம்ஸுக்கு சம்பளப் பாக்கி என்றும், அதனால்தான் அவர் நடிக்க வரமாட்டேன் என்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் சிம்ஸ் கர்ப்பமாக இருப்பதால்தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக பின்னர்தெரிவிக்கப்பட்டது.

தற்போது படத்தை ஒரு வழியாக சுட்டு முடித்து விட்டார்கள். டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த நேரத்தில்சில ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார் படத்தின் இயக்குநர் ராஜகோபால்.

அது என்ன ரகசியம்? இதோ எடுத்து விடுகிறோம். கேட்டுக் கொள்ளுங்கள். கிச்சாவில் சிம்ஸுக்குப் போட்டியாக அதிரடிகுத்தாட்டக்காரி ரகஸ்யாவையும் களம் இறக்கியுள்ளார்களாம். அதாவது இரண்டு குத்துப் பாட்டுக்கு படு ஆட்டம்போட்டிருக்கிறாராம் ரகஸ்.

எதுக்கு இரண்டு குத்து? ஆக்சுவலா, அந்த பாட்டுக்களுக்கு சிம்ரன்தான் ஆட வேண்டுமாம். ஆனால், தான் கர்ப்பமாகஇருப்பதால் இந்தக் குத்துப் பாட்டுக்களுக்கு ஆட முடியாது. வேண்டுமானால் வேறு மாதிரியாக மாற்றுங்கள் நடித்துக்கொடுக்கிறேன் என்றாராம்.

ஆனால் பாட்டை எப்படி மாற்றுவது என்று குழம்பிய இயக்குநரும், தயாரிப்பாளரும், சரி, பரவாயில்லை மேடம் என்று கூறிவிட்டு வந்து விட்டனர். உட்கார்ந்து யோசித்தவர்களின் எண்ணத்தில் வந்து விழுந்தார் ரகஸ்யா. அவ்வளவுதான், ரகஸ்யாவைப்பிடித்து போட்டு இரண்டு பாட்டையும் முடித்து விட்டார்களாம்.

சும்மா சொல்லக் கூடாது, ரகஸ்யாவின் ஆட்டம் படு கலர்புல்லாக வந்துள்ளதாம். சென்சாருக்கு தப்பி வந்தால் பெரிசு என்று கூறும்அளவுக்கு போட்டுத் தாக்கியுள்ளாராம் ரகஸ்.

இந்தப் படத்தில் ஆசிரியையாக வருகிறார் சிம்ஸ். அவரது காதலனாக ஜெய் ஆகாஷும், ஜொள்ளு விடும் மாணவனாக "பாய்ஸ்மணிகண்டனும் நடித்துள்ளார்கள்.

எப்படியோ அடித்து கொளுத்தும் கத்திரி வெயிலுக்கு இதமாக கிச்சா குளு குளு வென இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil