»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுள்ளான் படத்தில் தனுசுடன் நடித்து வரும் சிந்து துலானிக்கு நடிப்பு நன்றாகவே வருகிறதாம்.

மும்பையைச் சேர்ந்த இவர் ஏற்கனவே ஆந்திராவில் அதிதி என்ற தெலுங்குப் படத்தில் கவர்ச்சி காட்டியவர் தான்.ஆனால், தமிழில் எடுத்த எடுப்பிலேயே கவர்ச்சி காட்டினால் ஓரம் கட்டிவிடுவார்கள் என்று சிலர் அறிவுரைதந்தார்களாம்.

இதனால் சுள்ளானில் இவர் கொஞ்சம் கெடுபிடியாய் இருக்கவே, படத்தில் மசாலாவுக்காக சங்கவியை ஒருபாடலுக்குச் சேர்த்தார்கள்.

சண்டை கோழி கீறும்.. கீறும்.. சிங்கக்குட்டி சீறும்.. சீறும்.., சுள்ளான் பெயரைக் கேட்டா செவுலு பிகிலு ஊதும்என்ற தத்துவப் பாடலுக்கு சங்கவி போட்டுள்ள ஆட்டம் ரொம்ப நாளைக்கு நமக்கெல்லாம் மறக்காதாம்.

ஒரு பாட்டுக்காக படத்தில் நுழைந்த கையோடு, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் சங்கவி போட்ட சோப்பைப்பார்த்து சிந்து அரண்டுவிட்டாராம். விட்டால் படத்தில் முக்கிய ரோலை வாங்கி நம்மை டம்பியாக்கிவிடுவார் என்றுநினைத்த சிந்து ஒத்துழைப்புக்கு முன் வர, அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுவிட்டதாம் சுள்ளான் யூனிட்.

பிராய்லர் கோழியாய் சிந்துவை உரித்து சுடச் சுட காட்சிகளை சுட்டிருக்கிறார்கள். சங்கவிக்குப் போட்டி போட்டுக்கொண்டு சிந்துவும் ரவுண்டு கட்டி கலக்கியிருக்கிறாராம்.

படம் ஆக்ஷன் கலந்த மசாலா படமாம். அதுவும் தனுஷ் தான் ஹீரோ என்றால், ஹீரோயின் சாப்ட் போர்ன்அளவுக்கு இறங்கியாக வேண்டுமே?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil