»   »  குண்டமாக்காரி சிந்தூரி

குண்டமாக்காரி சிந்தூரி

Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் சிந்தூரி இப்போது தெலுங்கில் பெத்த நாயகியாகி விட்டார். கை நிறையப் படங்களுடனும், உடல் நிறைய கிளாமருடனும் கலக்கி வருகிறாராம்.

இந்தியை அம்மா பாஷையாகக் கொண்ட சிந்தூரி பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். சிறிய வேடத்தில் வந்து போன அவரை நிறைய பேருக்கு ஞாபகம் இருந்திருக்காது. அதன் பின்னர் ஓரிரு படங்களில் தலையைக் காட்டினார்.

நல்ல முகவாகும், கிளாமர் வாகும் இருந்தும் கூட தமிழ் சினிமா சிந்தூரியை சரியாக சீந்தவில்லை. அடப் போங்கப்பா என்று அலுத்துக் கொண்ட சிந்தூரி அப்படியே ஹைதராபாத்துக்கு வண்டி ஏறினார்.

யோகம் நன்றாக இருக்கவே தெலுங்கில் மளமளவென நிறையப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது குண்டமாக்காரி மணவாடு என்ற படம் உள்பட பல படங்கள் சிந்தூரி கையில் உள்ளதாம்.

தெலுங்கு தனக்குத் தந்த வரவேற்பால் நெகிழ்ந்து போய் விட்ட சிந்தூரி, சொந்தக் குரலில் பேசி நடிக்கவும் ஆர்வமாக உள்ளாராம். இதனால் வாத்தியார் ஒருவரை வைத்து தெலுங்கு கற்று வருகிறார்.

ஒ ஃபார் ஒக்கடு, இ ஃபார் இப்புடு, நை ஃபார் நைனா என்று கிளிப் பிள்ளை போல சொல்லிச் சொல்லி தெலுங்கு பழகி வருகிறாராம்.

தெலுங்கிலேயே முடிந்தவரை காலம் தள்ளி விட்டு வாய்ப்புகள் குறைந்த பின்னர் வேறு மொழிப் படங்களுக்கு முயற்சிக்காமல் தாயகம் திரும்பி விடும் உத்தேசத்தில் உள்ளாராம் சிந்தூரி.

Please Wait while comments are loading...