சூரியுடன் பைக்கில் சென்ற சிவகார்த்திகேயன்... திடீரென வைரலாகும் ஃபோட்டோ
சென்னை : நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பலவகையிலும் பிஸியாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் தயாரித்த வாழ் படம் கடந்த மாதம் நேரடியாக ஓடிடி.,யில் வெளியிடப்பட்டது. இவர் நடித்து வரும் டாக்டர், டான் படங்களையும் அவரே தயாரித்து வருகிறார்.
தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திற்கு பாட்டும் எழுதி உள்ளார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே டாக்டர் படத்திற்கும் பாட்டெழுதி உள்ளார். கனா உள்ளிட்ட சில படங்களில் பின்னணியும் பாடி உள்ளார். இப்படி பலவகையிலும் அசத்தி வரும் சிவகார்த்திகேயன் பற்றி சமீப காலமாக அதிக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது, அது பற்றி சிவகார்த்திகேயன் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு, மகனுக்கு சுத்தமான தமிழ் பெயர் வைத்திருப்பது என பலவகையிலும் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

பைக்கில் சென்ற சிவகார்த்திகேயன்
டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். முழுவீச்சில் நடந்து வரும் இந்த படத்தின் ஷுட்டிங்கின் போது சூரியுடன், சிவகார்த்திகேயன் பைக்கில் சென்றுள்ளார். செட்டில் எடுக்கப்பட்ட இந்த ஃபோட்டோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் ஃபோட்டோஸ்
ரெட்ரோ ஆர்எக்ஸ் 100 மாடல் பைக்கை சூரி ஓட்ட, சிவகார்த்திகேயன் பின்னால் அமர்ந்து செல்வது போல் இந்த ஃபோட்டோக்கள் அமைந்துள்ளன. மற்றொரு ஃபோட்டோவில் சிவகார்த்திகேயன் கழுத்தில் கேமிராவுடன் நடந்து செல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

பத்திரிக்கையாளராக நடிக்கிறாரா
இதுவரை வெளிவராத இந்த ஃபோட்டோக்களால் படம் பற்றிய ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. படத்திற்கு டான் என பெயர் வைத்துள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயன் கேமிராவுடன் இருப்பது போல் ஃபோட்டோ வெளியாகி உள்ளதால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர் ரோலில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டாவது முறையாக அனிருத்
டான் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, ஷிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்து, ரிலீசுக்கு காத்திருக்கும் டாக்டர் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார்.

விரைவில் பொள்ளாச்சி ஷுட்டிங்
டான் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது சென்னையில் நடந்து வரும் டான் படத்தின் ஷுட்டிங், அடுத்ததாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் எடுக்கப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











