»   »  பறக்கும் அழகி ஸ்னேகா

பறக்கும் அழகி ஸ்னேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிலிர்ப்புச் சிரிப்பழகி ஸ்னேகா படு வித்தியாசமான ஒரு கேரக்டரில் மலையாளப் படத்தில் நடிக்கப் போகிறார்.

நாக் ரவிக்கு நாக்கவுட் கொடுத்த கையோடு மறுபடியும் பிசியாகி விட்டார் ஸ்னேகா. தங்கர்பச்சானின் பள்ளிக்கூடத்தில் கோகிலா டீச்சராக அட்டகாசம் செய்து வரும் ஸ்னேகா, மலையாளத்திலும் தலையைக் காட்டி வருகிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஹென்றி தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கப் புக் ஆகியுள்ளார் ஸ்னேகா. இதில் ஸ்னேகாவுடன் ஜோடி போடுவது மம்முட்டி. படத்திற்குப் பெயர் வந்தே மாதரம்.

ஸ்னேகா இதில் விமான ஓட்டியாக அதாவது பைலட்டாக நடிக்கிறாராம். தமிழ் டப்பிங்கிலும் ஸ்னேகாதான் நாயகியாம். தமிழுக்கு வேறு பெயர் வைக்கப் போகிறார்களாம்.

சமீபத்திய தமிழ் நடிகைகள் பைலட் வேடத்தில் நடித்ததில்லை. முதல் முறையாக ஸ்னேகா விமானம் ஏறி விளையாடப் போகிறார்.

இனிமேல் நடித்தால் வித்தியாசமான வேடங்களில் தான் நடிக்க வேண்டும் என்று வேண்டுதலையோடு இருந்து வந்தார் ஸ்னேகா. அவர் நினைத்தது போலவே டீச்சர் வேடம், பைலட் வேடம் என பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளார்.

அடுத்து விண்வெளி வீராங்கனையாக நடிப்பாரோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil