»   »  ஸ்னேகா..மாறிய இயக்குனர்

ஸ்னேகா..மாறிய இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்னேகா-மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இணைந்து நடித்து வரும் அறுவடை படத்தில் இருந்து டைக்டரை பாதியில் கழற்றிவிட்டுள்ளார் தயாரிப்பாளர்.

பங்கஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹென்ரி தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது. மலையாளத்தில் படத்தின் பெயர் வந்தே மாதரம்.

இதை கார்த்தி என்ற புதுமுக இயக்குனர் தான் டைரக்ட் செய்து வந்தார். திரைக் கதையையும் அவரே அமைத்தார்.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே ஹென்ரிக்கும் கார்த்திக்கும் ஒத்துப் போகவே இல்லையாம். நடுவில் வந்து தயாரிப்பாளர் ஓவராக நச்சரிப்பதாக கார்த்தி நினைத்திருக்கிறார். ஆனால், கதையின் போக்கும் படத்தின் போக்கும் ஹென்ரிக்குப் பிடிக்கவில்லையாம்.

ஏகப்பட்ட கடன் வாங்கி எடுக்கும் படத்தை தம்பி ஊத்தி மூடிருவாரோ என்று பயந்து போன ஹென்ரி இயக்குனருக்கு நெருக்கடிகளை அதிகமாக்க, தானாகவே படத்தை விட்டு விலகிவிட்டாராம் கார்த்தி.

இப்போது இந்தப் படத்தின் மிச்சப் பகுதிகளை இயக்கப் போவது திரைப்படக் கல்லூரி மாணவரான அரவிந்த். இவரும் புதுமுக இயக்குனர் தான்.

படத்தில் ஸ்னேகாவுக்கு அவரைப் போலவே மிக அழகிய ரோல். மிகச் கச்சிதமாக கலக்கி வருகிறாராம்.வித்யாசாகர் தான் இசை அமைத்திருக்கிறார்.

இதில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் சில காட்சிகளில் தலையை காட்டவுள்ளார். அவருக்கு காமெடி ரோலாம்...

என்னாது...!!?!?!?!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil