»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படப் பிடிப்பில் முத்தக் காட்சியில் நடித்தபோது நடிகை ஸ்னேகாவின் உதட்டைநடிகர் ஷாம் கடித்துவிட்டார். இதையடுத்து அவரது கன்னத்தில் ஸ்னேகா பளார் என்று அறை விட்டார்.

இதையடுத்து அந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

12 பி படத்தின் மூலம் அறிமுகமான ஷாம், எய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஸ்னேகாவுடன் நடித்துவருகிறார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் கடற்கரையில் நேற்று இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.ஷாமும் ஸ்னேகாவும் கடற்கரையில் ஓடிப் பிடித்து விளையாடும் அந்தக் காட்சியின் இறுதியில் ஸ்னேகாவை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்று நடிகர் ஷாமிடம் டைரக்டர் வஸந்த் கூறினார்.

இதையடுத்து இருவரும் தூரத்தில் ஓடி வந்தனர். இது லாங் ஷாட்டில் படமாக்கப்பட்டது. இருவரும் கேமராவைநெருங்கும்போது கட்டிப் பிடித்து முத்தமிட்டார் உதட்டில் ஷாம்.

ஆனால், அது சாதாரண முத்தமில்லை. மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடித்த ஷாம் ஸ்னேகாவின் உதட்டை கடித்தேவிட்டார். இதனால் வலியில் துள்ளிய ஸ்னேகா ஷாமின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார்.

அறை வாங்கிய ஷாம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார். டைரக்டர், தயாரிப்பாளர், கேமராமேன்,டான்ஸ் மாஸ்டர் உள்பட ஸ்பாடில் இருந்த அத்தனை பேரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இப்படி ஒரு காட்சியை நம் படத்தில் இல்லையே என்று டைரக்டர் வஸந்த் யோசித்துக் கொண்டிருக்கும்போதேஸ்னேகா அழுதபடி ஓடிவந்தார்.

தன்னை ஷாம் வேண்டுமென்றே இழுத்துக் கட்டிப்பிடித்து உதட்டில் கடித்ததாக அவர் புகார் கூறினர். அவரைஅனைவரும் தேற்றினர்.

அறை வாங்கிய ஷாம் அந்த இடத்திலேயே கடலை வெறித்தடி நின்றிருந்தார்.

இதையடுத்து தயாரிப்பாளர் தலையிட்டு ஸ்னேகாவிடமும் ஷாமிடமும் பேசினார். இருவரையும்சமாதானப்படுத்தினார். அதுவரை சூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது.

யாருக்காக பேசுவது என்று தெரியாமல் டைரக்டர் வஸந்த் ஒரு பக்கமாய் ஒதுங்கி நின்றிருந்தார்.

தயாரிப்பாளரின் பேச்சால் சமாதானமடைந்த ஸ்னேகா தொடர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டார். ஷாமும் அறையைமறந்து நடிக்க முன்வந்தார்.

இதன் பின்னர் தான் சூட்டிங் மீண்டும் நடந்தது. இந்தச் சம்பவத்தால் சூட்டிங் பல மணி நேரம் நின்றுபோனது.

12 பி படப்பிடிப்பிலேயே சிம்ரன், ஜோதிகாவிடம் ஷாம் கொஞ்சம் ஓவராகவே உணர்ச்சிவசப்பட்டு ஜொள்விட்டதாகக் கூறப்பட்டது. இதில் ஜோவுடன் ஊர் சுற்றும் அளவுக்கு நெருக்கமானார். இப்போது அவரதுஉணர்ச்சி ஸ்நேகாவிடம் பாய்ந்திருக்கிறது. இதனால் அறை வாங்கியிருக்கிறார்.

படத்தின் பெயரை பேசாமல் கன்னத்தில் அறைவிட்டால் என்று மாற்றிவிடலாமே...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil