»   »  ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்ப அதிர்ச்சி: சூரியை கண்கலங்க வைத்த உதயநிதி

ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்ப அதிர்ச்சி: சூரியை கண்கலங்க வைத்த உதயநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூரி தனது 39வது பிறந்தநாளை உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படப்பிடிப்பில் கொண்டாடினார்.

உதயநிதி ஸ்டாலின் எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரஸா நடிக்கிறார். படத்தில் சூரியும் உள்ளார்.

Soori celebrates birthday with Udhayanidhi Stalin

இந்நிலையில் சனிக்கிழமை சூரி தனது 39வது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார்.

Soori celebrates birthday with Udhayanidhi Stalin

இது குறித்து உதயநிதி கூறுகையில்,

நான் சூரியின் காமெடிக்கு தீவிர ரசிகனாகிவிட்டேன். அவரது பிறந்தநாளை கொண்டாடியதில் பெருமையாக உள்ளது. சூரியின் கையில் உள்ள படங்களை பார்க்கும்போது அவர் வேற லெவலுக்கு செல்வார் என்றார்.

Soori celebrates birthday with Udhayanidhi Stalin

சூரி கூறுகையில்,

ஒருவரின் பிறந்தநாளை தன் பிறந்தநாள் போன்று கொண்டாட பெரிய மனம் வேண்டும். என் பிறந்தநாளை கொண்டாட உதயநிதி சார் எடுத்துக் கொண்ட முயற்சி என்றும் என் நினைவில் இருக்கும். அவருக்கும், இயக்குனர் எழிலுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றார்.

Soori celebrates birthday with Udhayanidhi Stalin
English summary
Actor Soori has celebrated his 39th birthday on the sets of Udhayanidhi Stalin's upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil