»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

கொஞ்சிப் பேசலாம் படத்தில் மிக அருமையாய் நடித்து, மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார் புதுமுகம் ஸ்ரீ.

தமிழில் நிச்சயமாய் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்கிறார்கள்.

கிராமத்துக் கதையான இந்தப் படத்தில் இவருக்குத் தந்தையாக ராஜ்கிரண் நடிக்க,

அவருக்கு இணையாக நடிப்பில்போட்டி போட்டிருக்கிறார்.

தாயை இழந்துவிட்டு, தந்தையின் அதிகப்படியான கண்டிப்பால் அடக்கப்படும் ஒரு மகளின் ஆக்ரோஷம், காதல்,சோகம் என முகத்தில் அத்தனாை பாவனைகளும் மிக இயல்பாகக் காட்டி நடித்திருக்கிறார்.

புத்திசாலித்தனமான நடிப்பால் என்னை மட்டுமல்ல, படம் பார்த்த எல்லோரையுமே கவர்ந்துவிட்டார் ஸ்ரீ என்கிறார்கொஞ்சிப் பேசலாம் இயக்குனர் காளீஸ்வரன்.

நீண்ட நாட்களுக்குப் பின் நடிக்கத் தெரிந்த ஒரு புதுமுகம்,

அத்தோடு வசீகரமும் நிறைந்த ஒரு நடிகைகிடைத்திருக்கிறார் கோலிவுட்டுக்கு.

மேலும் சொந்தக் குரலில் பேசுவது இவரது பிளஸ் பாயிண்ட்.

நடனமும் மிக நன்றாகவே வருவதால்இளையராஜாவின் இசைக்கு மிக நளினமாய் ஆடிக் காட்டியிருக்கிறார்.

படத்துக்குப் படம் கேரளா, ஆந்திரா, மும்பை, கர்நாடகாவில் இருந்து லாட்டரி சீட்டுகள் மாதிரி (கவர்ச்சியைக்காட்ட மட்டும்) வந்திறங்கும் புதுமுக நடிகைகள் மத்தியில் இந்த பெங்களூர் பெண் நிச்சயம் தேறிவிடுவார்என்கிறார்கள்.

படப்பிடிப்பின்போது ஸ்ரீக்கு ராஜ்கிரணும் யோசனைகள் சொல்லி நடிப்பை மெருகேற்றினாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil